இந்தியாவின், குருகிராமில் இருந்து புறப்பட்டுள்ள இரண்டு இளம் இந்திய டேபிள் டென்னிஸ் வீரர்கள், அவ்னி துவா மற்றும் கிரிஷிவ் கர்க், விளையாட்டில் தங்கள் சிறந்த கவனத்தை செலுத்தி பலரது பாராட்டுகளை பெற்றுள்ளனர். 9 வயதுடைய இந்த இரு வளரும் விளையாட்டு வீரர்கள், கஜகஸ்தானின் அல்மாட்டி நகரில் சமீபத்தில் நடைபெற்ற உலக டேபிள் டென்னிஸ் (WTT) போட்டியில் வெற்றிவாகை சூட்டியுள்ளனர்.
11 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் தற்போது 10வது இடத்திலும், ஹரியானா அளவில் 1வது இடத்திலும் உள்ள அவ்னி, கடந்த ஜூலை 25 முதல் 28 வரை நடந்த போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இதற்கிடையில், U-11 சிறுவர்கள் பிரிவில் இந்தியாவின் 3-வது இடத்தில் இருக்கும் கிரிஷிவ், போட்டியின் கால் இறுதி வரை சென்று, இறுதியில் 5-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
அவர்களின் அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் கடுமையான பயிற்சி உள்ளிட்டவை தான், அவர்களை இவ்வளவு பெரிய வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது என்றால் அது மிகையல்ல. பயிற்சியாளர் குணால் குமார் மற்றும் டேபிள் டென்னிஸ் அகாடமிக்கு (PTTA), இது ஒரு கனவு நனவாகும் தருணம் என்றே கூறலாம். சர்வதேச மன்றத்தில் PTTAன் உயர்வுக்கு காரணமான, PTTA மாணவர்களான அவ்னி துவா மற்றும் கிரிஷிவ் கர்க் ஆகியோர் இந்தியாவின் கேம் சேஞ்சர்களாக மாறியுள்ளனர்.
அர்ப்பணிப்பு மற்றும் உழைப்பு
நமது ஏசியாநெட் செய்தி நிறுவனத்துடனான பிரத்யேக நேர்காணலில், அவ்னி மற்றும் கிரிஷிவ் ஆகியோரின் பயிற்சியாளர் குணால் குமார் தங்கள் பயணம் குறித்து விரிவாகப் பேசினர். அவ்னி துவா, தன்னம்பிக்கை மற்றும் திறமை கொண்ட ஒரு சிறுமி, டேபிள் டென்னிஸில் தன்னிடம் உள்ள பல திறமைகளை அவர் வெளிப்படுத்தியுள்ளார். "அவ்னி தற்போது U-11 பெண்கள் பிரிவில் இந்தியாவில் 10வது இடத்திலும் U-11 பிரிவில் ஹரியானாவில் முதலிடத்திலும் உள்ளார்.
கிரிஷிவ், ஒரு நம்பிக்கைக்குரிய சிறுவன், அவன் விளையாடும் டேபிள் டென்னிஸ் சுற்றுகளில் அவன் பிரகாசமாக ஜொலிக்கிறான். தற்போது U-11 பிரிவில் இந்தியா அளவில் மூன்றாம் இடத்திலும் மற்றும் ஹரியானா அளவில் நம்பர் 1 இடத்திலும் உள்ளார். கிரிஷிவ் கஜகஸ்தானில் நடந்த போட்டியில் குறிப்பிடத்தக்க திறமையை வெளிப்படுத்தினார். போட்டியில் 2-2 என்ற கணக்கில் 10-4 என்ற குறிப்பிடத்தக்க வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்த போதிலும், போட்டியின் அழுத்தம் அவரது செயல்திறனை பாதித்து, அதுவே அவருடைய கால் இறுதி தோல்விக்கு வழிவகுத்தது என்றார் பயிற்சியாளர். ஆயினும்கூட, அவரது உறுதியும், விடாமுயற்சியும் இந்த இளம் விளையாட்டு வீரருக்கு, ஒரு பிரகாசமான எதிர்காலத்தை உறுதிப்படுத்துகிறது என்றும் அவர் கூறினார்.
அகாடமி பயிற்சி
இந்த இரண்டு வளரும் டேபிள் டென்னிஸ் திறமைகளின் வெற்றிக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்பதைப் பற்றி விரிவாகப் பேசுகையில், பயிற்சியாளர் குணால் அவர்களின் கடுமையான அட்டவணைகள், மற்றும் அவர்கள் பயிலும் பள்ளியான குருகிராமில் உள்ள பிரக்ஞானம் பள்ளி வழங்கும் ஆதரவை நம்மால் அறிந்துகொள்ள முடிந்தது. காலை 6-7 மணி முதல் அவர்களுக்கு உடற்பயிற்சி பயிற்சி. பின்னர் 7-9 வரை அவர்களுக்கு டேபிள் டென்னிஸ் பயிற்சி வழங்குகிறேன்.
"பள்ளியும் ஒரு மகத்தான பணியைச் செய்துள்ளது, அந்த பள்ளி அவர்களுக்கு காலை உணவு, மதிய உணவு மற்றும் பழங்களை மதியம் 3 மணியளவில் வழங்குகிறது. அவர்கள் அகாடமிக்கு மாலை 5 மணிக்குத் திரும்பி, இரவு 8 மணி வரை பயிற்சி செய்துவிட்டுச் வீட்டுக்கு செல்கிறார்கள். வீட்டிற்கு சென்று அவர்களின் படிப்பை முடித்துவிட்டு அவர்கள் உறங்குகின்றனர். ஒவ்வொரு வியாழன் கிழமையும் நாங்கள் அவர்களுக்கு ஓய்வு கொடுக்கிறோம், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் லீக் போட்டிகள் நடத்துகிறோம். அவர்களுக்கு மனநல உதவி, பிசியோதெரபி போன்றவற்றை வழங்குகிறோம்" என்றும் குணால் குமார் மேலும் கூறினார்.
விளையாட்டுத் துறையில் கிரிக்கெட் ஆதிக்கம் செலுத்தும் இந்தியாவில், டேபிள் டென்னிஸ் வீரர்களின் பயணம் தனித்துவமான சவால்களை எதிர்கொள்கிறது. 150க்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட அகாடமி, திறமையான நபர்களைக் கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான ஆதாரங்களையும், ஆதரவையும் வழங்க முயற்சிக்கிறது.
கல்வி மற்றும் விளையாட்டுகளை சமநிலைப்படுத்துவது இளம் விளையாட்டு வீரர்கள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கு முதன்மையான கவலையாக உள்ளது. இருப்பினும், டேபிள் டென்னிஸ் மீதான பார்வை மாறி, பிரதமர் மோடி அரசின் ஆதரவு அதிகரித்தது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. Khelo India மற்றும் SAI இன் TOPS (Target Olympic Podium Scheme) திட்டம் போன்றவற்றால், பல இந்திய வீரர்கள் சர்வதேச அரங்கில் தங்கள் முத்திரையைப் பதிக்கத் தொடங்கியுள்ளனர்.
இளம் வீரர்களுக்கு கல்வி மற்றும் விளையாட்டை சமநிலைப்படுத்துவதே மிகப்பெரிய சவாலாகும். பெற்றோர்களுக்கு எதிர்காலத்தில் குழந்தை என்ன செய்யும் என்பது முக்கிய கவலையாக உள்ளது.ஆனால்
"இப்போது, டேபிள் டென்னிஸ் டாப் 10 விளையாட்டுகளில் உள்ளது ஆகையால் அவர்களின் எதிர்காலம் பிரகாசமான ஒன்றாக மாறியுள்ளது என்று குணால் குறிப்பிட்டார்.
விளையாட்டுத் துறையில் அர்ப்பணிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த டேபிள் டென்னிஸ் பயிற்சியாளர், "நீங்கள் ஒரு வேலையைப் பெற்று, வழக்கமான வாழ்க்கையை வாழ விரும்புபவராக இருந்தால், விளையாட்டில் உங்களுக்கென்று ஒரு இடம் எப்போதுமே இருக்காது என்றார்.
"எனது இலக்கு 2028 லாஸ் ஏஞ்சல்ஸில் நடக்கும் ஒலிம்பிக் தான், எங்கள் குழந்தைகள் சிலர் அதற்குச் சென்று நம் நாட்டைப் பெருமைப்படுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். சீனா, பிரான்ஸ், ஜப்பான் வீரர்கள் உலகின் முதல் 50 இடங்களுக்குள் இருக்கிறார்கள், அது ஏன் இந்தியர்களால் முடியாது?, 2028 மற்றும் 32 ஒலிம்பிக்கில் விளையாடி அவர்கள் இந்தியாவுக்காக பதக்கம் வெல்ல வேண்டும். இது ஒரு நாள் ஆட்டம் அல்ல. பல வருட கடின உழைப்பின் பயணம், "என்று PTTA பயிற்சியாளர் கூறினார்.
இவ்வளவு இளம் வயதில் டேபிள் டென்னிஸில் அவ்னி துவா மற்றும் கிரிஷிவ் கர்க் செய்த குறிப்பிடத்தக்க சாதனைகள், நாடு முழுவதும் உள்ள ஆர்வமுள்ள விளையாட்டு வீரர்களுக்கு ஒரு உத்வேகமாக விளங்குகிறது. அவர்களின் பயணம், ஆர்வம், அர்ப்பணிப்பு மற்றும் ஒழுக்கமான பயிற்சியின் சக்திக்கு ஒரு சான்றாகும்.
கயாக், பெயிண்ட்பால் என்று ஜாலியா இருக்கும் கேஎல் ராகுல்: வைரலாகும் வீடியோ!