மகளிர் ஹாக்கி: 2-வது ஆட்டத்திலும் தென் கொரியாவை கலங்கடித்தது இந்தியா...

Asianet News Tamil  
Published : Mar 07, 2018, 01:48 PM ISTUpdated : Sep 19, 2018, 02:02 AM IST
மகளிர் ஹாக்கி: 2-வது ஆட்டத்திலும் தென் கொரியாவை கலங்கடித்தது இந்தியா...

சுருக்கம்

Women hockey India crash in South Africa

மகளிர் ஹாக்கியின் 2-ஆவது ஆட்டத்தில் தென் கொரியாவை 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி கொண்டது.

 

தென் கொரியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இந்திய மகளிர் ஹாக்கி அணி விளையாடி வருகிறது. அந்நாட்டின் தலைநகர் சியோல் நகரில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் அந்த அணியை 1-0 என்ற கோல் கணக்கில் இந்தியா வென்றது.

 

இந்நிலையில், 2-வது ஆட்டம் இன்சியான் நகரில் நேற்று நடைபெற்றது.  இந்த ஆட்டத்தின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணிக்கு 6-வது நிமிடத்தில் கோல் வாய்ப்பு கிடைத்தது. முதல் கோலை பூனம் ராணி பதிவு செய்தார்.

 

எனினும், தென் கொரிய அணி 10-வது நிமிடத்தில் இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முதல் கோலை பதிவு செய்தது. அந்த கோலை யூரிம் லீ அடித்தார்.

 

பின்னர், விவேகத்தைக் காட்டிய இந்திய வீராங்கனைகள் சிறப்பாக விளையாட, இந்திய அணியின் கேப்டன் ராணி 27-வது நிமிடத்தில் இரண்டாவது கோலைப் பதிவு செய்தார். ஒரு கோல் முன்னிலையுடன் முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது.

 

இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியவுடன் 2-வது கோலை தென் கொரியா பதிவு செய்த மறுநிமிடமே இந்தியாவின் குர்ஜித் கௌர் அணியின் 3-வது கோலைப் பதிவு செய்தார்.

 

இதனையடுத்து, ஆட்ட நேரம் முடியும் வரை தென் கெரிய அணியால் கோல் எதுவும் பதிவு செய்ய இயலவில்லை. இதையடுத்து, இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

 

இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.

 

தென் கொரியாவுக்கு எதிராக 3-வது ஆட்டம் நாளை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Lungi Ngidi Injury: தலையில் அடிபட்டு மருத்துவமனையில் லுங்கி இங்கிடி... இப்போது எப்படி இருக்கிறார்..?
Vaibhav Sooryavanshi: 15 பந்தில் அரைசதம், 36 பந்தில் சதம்... 5 மெகா சாதனைகளை உடைத்த இளம் புயல்..!