ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில்  கோலிக்கு இரண்டாவது இடம் பிடித்து அசத்தல்...

Asianet News Tamil  
Published : Mar 07, 2018, 01:44 PM ISTUpdated : Sep 19, 2018, 02:02 AM IST
ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில்  கோலிக்கு இரண்டாவது இடம் பிடித்து அசத்தல்...

சுருக்கம்

The second place in the ICC Test Ranking list is the second ...

ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 2-ஆவது இடம் பிடித்து அசத்தியுள்ளார்.

 

ஐசிசி டெஸ்ட் தரவரிசை பேட்ஸ்மேன்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஸ்மித் 947 புள்ளிகளுடன் முதலிடத்திலும், 912 புள்ளிகளுடன் கோலி 2-வது இடத்திலும் உள்ளனர்.

 

இங்கிலாந்தின் ஜோ ரூட் 3-ஆவது இடத்திலும், நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன் 4-ஆவது இடத்திலும் உள்ளனர்.

 

மற்றொரு ஆஸ்திரேலியாவின் அதிரடி ஆட்டக்காரரான டேவிட் வார்னர் 833 புள்ளிகளுடன் 5-ஆவது இடத்தில் உள்ளார். 810 புள்ளிகளுடன் புஜாரா 6-ஆவது இடத்திலும், நியூஸிலாந்தின் ராஸ் டெய்லர் 9-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் ஹசிம் ஆம்லா 10-வது இடத்திலும் உள்ளனர்.

 

அதேபோன்று, ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசையில் இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 844 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

 

887 புள்ளிகளுடன் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதலிடத்திலும், 873 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

 

நான்காவது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஜோஷ் ஹசல்வுட், ஐந்தாவது இடத்தில் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் உள்ளனர்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

காதலியை கரம் பிடிக்கும் ஷிகர் தவான்.. 2வது திருமணம்.. யார் இந்த சோஃபி ஷைன்?
IND vs NZ: தமிழக வீரர் விலகல்.. மாற்று வீரர் இவரா? ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்!