
சர்வதேச அளவில் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரராக வலம் வருகிறார் இந்திய கேப்டன் கோலி. ஆட்டத்துக்கு ஆட்டம் சதங்களையும் சாதனைகளையும் குவித்து வருகிறார்.
மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் அதிக ரன்கள், அதிக சதங்கள் ஆகிய சாதனைகளை எல்லாம் விராட் கோலி முறியடித்துவிடுவார். விராட் கோலிதான் சமகால கிரிக்கெட்டில் மிகச்சிறந்த மற்றும் அபாயகரமான பேட்ஸ்மேன் என பல ஜாம்பவான்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலியின் விக்கெட்டை எடுக்க முடியாமல் தென்னாப்பிரிக்க பவுலர்கள் திணறினர்.
இந்நிலையில், விராட் கோலி குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ராத், விராட்கோலி திறமையான பேட்ஸ்மேன். தன்னம்பிக்கை உள்ள வீரர். ஒரு பவுலராக நான் அவருக்கு நெருக்கடி கொடுக்க விரும்புவேன். அவர் அதிக ரன் குவிக்கும் திசைகளை கண்டறிந்து அதை தடுக்க முயற்சிப்பேன். அவருக்கு சரியான திசையில் தான் பந்துவீச வேண்டும். ஷாட்பிட்ச் மற்றும் புல்டாசாக வீசினால் அடித்து நொறுக்கிவிடுவார். அவரது மனநிலையுடன் விளையாடி அவர் ரன் குவிப்பதை தடுக்க முனைவேன் என மெக்ராத் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.