வனப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட இளம் கிரிக்கெட் வீராங்கனை: அணியில் இடம் பெறாதது தான் காரணமா?

By Rsiva kumarFirst Published Jan 14, 2023, 11:34 AM IST
Highlights

ஒடிசாவில் காணாமல் போன இளம் கிரிக்கெட் வீராங்கனை வனப்பகுதியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

ஒடிசாவில் மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனையாக இருந்தவர் ராஜஸ்ரீ (25). புதுச்சேரியில் நடைபெற இருந்த தேசிய அளவிலான கிரிக்கெட்டில் பங்கேற்க ஒடிசா கிரிக்கெட் சங்கம் சார்பாக நடந்த பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். ஆனால், புதுச்சேரியில் பங்கேற்பதற்கான ஒடிசா அணியின் இறுதிப் பட்டியலில் அவரது பெயர் இடம் பெறவில்லை. கடந்த 10 ஆம் தேதி இறுதிப்பட்டியல் அறிவிக்கப்பட்ட நிலையில், மாநில அணியில் கூட அவரது பெயர் இடம் பெறவில்லை. இதனால், மன வேதனையடைந்து அழுதுள்ளார். 

Hockey World Cup 2023: இன்றைய போட்டியில் அடுத்தடுத்து பலப்பரீட்சை நடத்தும் டீம் என்னென்ன தெரியுமா?

இதையடுத்து கடந்த 11 ஆம் தேதி நடந்த பயிற்சிக்கு ராஜஸ்ரீ செல்லவில்லை. தனது தந்தையை காண பூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால், ராஜஸ்ரீ ஊருக்கு செல்லவில்லை என்பதை அறிந்த பயிற்சியாளர் அவரது தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், அது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இதனால், சந்தேகமடைந்த பயிற்சியாளர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், தான் பூரி மாவட்டத்திலுள்ள ராமசண்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் விறகு பிறக்க சென்ற உள்ளூர் வாசிகள் வனப்பகுதிக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம் இருப்பதாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட்: இந்திய அணி அறிவிப்பு!

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் உடலானது ராஜஸ்ரீ தான் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், ஜெயஸ்ரீ தனது சகோதரி, கடுமையான மன உளைச்சலில் இருந்ததாகவும், அவர் சிறப்பாக செயல்பட்டாலும் கூட ஒடிசா கிரிக்கெட் சங்கத்தால் தேர்வு செய்யப்பட்ட முறையற்ற முறைகள் காரணமாக அவரது பெயர் இறுதிப்பட்டியலில் ஒடிசா அணியில் இடம் பெறவில்லை என்று தன்னிடம் கூறியதாக குற்றம் சாட்டினார்.

கே எல் ராகுல் - அதியா ஷெட்டி திருமணம் கன்பார்ம்: தேதி குறிச்சாச்சு, கெஸ்ட் ஹவுஸ் கூட ரெடி!

இதைத் தொடர்ந்து ராஜஸ்ரீயின் தந்தை குணநிதி, சக வீராங்கனைகளுடன் தங்கியிருந்த ஹோட்டலை விட்டு 30 கிமீ தொலைவில் உள்ள யானைகள் நடமாட்டம் அதிகம் கொண்ட அந்த அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் எப்படி தனது மகள் தனியாக சென்றிருக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார். அதுமட்டுமின்றி தனது மகளை ஒடிசா கிரிக்கெட் சங்க அதிகாரிகள் கொலை செய்துவிட்டு அந்த கொலையை மறைப்பதற்கு அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் கொண்டு சென்று தூக்கில் தொடங்கவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!