நான் ஆணாக இருந்திருக்கலாம்.. சீன டென்னிஸ் வீராங்கனை ஆதங்கம்

By karthikeyan VFirst Published May 31, 2022, 6:13 PM IST
Highlights

சீன டென்னிஸ் வீராங்கனை ஜெங் கின்வென் மாதவிடாய் வயிற்றுவலியால் போலந்து வீராங்கனை இகாவிடம் தோல்வியை  சந்தித்ததையடுத்து, தான் ஒரு ஆணாக இருந்திருக்கலாம் என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் ஜெங்.
 

சீன டென்னிஸ் வீராங்கனை ஜெங் கின்வென் ஃப்ரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்டதால் போட்டியில் தோற்றார். 

போலந்தை சேர்ந்த நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்விடெக்குடன் ஜென் கின்வென் மோதிய போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் மாதவிடாய் வயிற்று வலியால், அவரால் சரியாக ஆடமுடியாமல் தோற்றுப்போனார். 

19 வயதே ஆன ஜெங் கின்வென், முதல் செட்டை 6-7 என கைப்பற்றியிருந்தாலும், அடுத்த 2 செட்டுகளையும் 6-0 மற்றும் 6-2 என்ற கணக்கில் இழந்தார். இதையடுத்து  அந்த போட்டியில் தோல்வியை தழுவினார் ஜெங் கின்வென்.

தோல்விக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜெங் கின்வென், காலில் காயம் ஏற்பட்டது. கால் காயம் பலமானதுதான். ஆனால் வயிற்று வலியுடன் ஒப்பிடும்போது கால் காயம் பெரிதாக தெரியவில்லை. இது பெண்களுக்கு நடக்கும் விஷயம். முதல் நாளன்று வலி சற்று அதிகமாகவே இருக்கும். நான் ஆணாக இருந்திருக்கலாம். அப்படி ஆணாக இருந்திருந்தால் இந்த பாதிப்பு இருந்திருக்காது. என்னுடைய ஆட்டத்தை ஆடமுடியாமல் போயிற்று. இந்த வலி இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் நன்றாகவும் மகிழ்ச்சியுடனும் விளையாடியிருப்பேன். அது முடியாமல் போனது வருத்தமளிக்கிறது என்று ஜெங் கின்வென் தெரிவித்தார்.
 

click me!