விம்பிள்டன் டென்னிஸ்: நடால், ஜோகோவிச், ஹேலப் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினர்…

Asianet News Tamil  
Published : Jul 07, 2017, 10:06 AM ISTUpdated : Sep 19, 2018, 12:51 AM IST
விம்பிள்டன் டென்னிஸ்: நடால், ஜோகோவிச், ஹேலப் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினர்…

சுருக்கம்

Wimbledon tennis Nadal Jokovic and Halp enter into third round

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோர், ஹேலப் மூன்றாவது சுற்றுக்கு அசத்தலாக முன்னேறினர்.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் உலகின் 4-ஆம் நிலை வீரரான ரஃபேல் நடால் தனது 2-ஆவது சுற்றில் அமெரிக்காவின் டொனால்ட் யங்குடன் மோதினார்.

இதில், 6-4, 6-2, 7-5 என்ற செட் கணக்கில் நடால் வென்றார்.

நடால் தனது மூன்றாவது சுற்றில் ரஷியாவின் கரேன் காச்சனோவை சந்திக்கிறார்.

மற்றொரு சுற்றில் செக் குடியரசின் ஆடம் பாவ்லாசெக்கை எதிர்கொண்டார் உலகின் 2-ஆம் நிலை வீரரான ஜோகோவிச்.

இதில் 6-2, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் வென்றார்.

ஜோகோவிச் தனது மூன்றாவது சுற்றில் லாத்வியாவின் எர்னெஸ்ட் கல்பிஸை சந்திக்கிறார்.

மகளிர் பிரிவு 2-வது சுற்றில் பிரேசிலின் ஹத்தாத் மாயியாவை எதிர்கொண்டார் உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சைமோனா ஹேலப்.

இதில் 7-5, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார் ஹேலப்.

ஹேலப் தனது 3-வது சுற்றில் சீனாவின் பெங் சுவாயை சந்திக்கிறார்.

மற்றொரு ஆட்டத்தில் உலகின் 4-ஆம் நிலை வீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விடோலினா 6-3, 6-0 என்ற செட் கணக்கில் இத்தாலியின் ஃபிரான்செஸ்கா ஷியாவோனை வீழ்த்தினார்.

இதேபோல் ஸ்பெயினின் கார்பின் முகுருஸா தனது 2-ஆவது சுற்றில் 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் பெல்ஜியத்தின் யானினா விக்மேயரை வீழ்த்தினார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Lionel Messi Net Worth: 6 சொகுசு ஹோட்டல்கள், ரூ.2,000 கோடிக்கும் அதிகமான சொத்து மதிப்பு.. பிசினஸிலும் கொடிகட்டிப் பறக்கும் மெஸ்ஸி!
FIFA 2026 Prize Money: ஜெயிச்சா லைஃப் செட்டில்.. தோத்தாலும் 100 கோடி! மொத்த பரிசுத்தொகை எவ்வளவு?