அபாரமான ஆட்டத்தால் மே.தீவுகளை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா…

Asianet News Tamil  
Published : Jul 07, 2017, 10:01 AM ISTUpdated : Sep 19, 2018, 12:51 AM IST
அபாரமான ஆட்டத்தால் மே.தீவுகளை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா…

சுருக்கம்

India defeated west indies and won the cup

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில்  தொடரைக் கைப்பற்றி கோப்பையை வென்றது.

இந்தியாவுக்கு எதிரான 5-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் டாஸ் வென்ற முதலில் பேட் செய்யத் தீர்மானித்தது.

அந்த அணியின் தொடக்க வீரர் எவின் லீவிஸ் 9 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவர் ஹார்திக் பாண்டியாவின் பந்துவீச்சில் கோலியிடம் கேட்ச் கொடுத்தார்.

அவருடன் வந்த கைல் ஹோப் சற்று நிலைத்து ஆடி அரைசதத்தை நெருங்கினார். எனினும் அவர் 46 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் உமேஷ் யாதவின் பந்துவீச்சில் தவனிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

அடுத்து வந்த ஷாய் ஹோப் அரைசதம் கடந்து ஆட்டமிழந்தார். முகமது சமி பந்துவீச்சில் ரஹானேவிடம் கேட்ச் கொடுத்த அவர் 51 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ரோஸ்டன் சேஸ் எல்பிடபிள்யூ முறையில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் டக் அவுட் ஆனார்.

தொடர்ந்து வந்த ஜேசன் முகமது 16 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் கேதார் ஜாதவ் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வீழ்ந்தார்.

இவ்வாறாக இறுதியில் மேற்கிந்தியத் தீவுகள் 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 205 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

206 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பேட்டிங் செய்த இந்திய அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மே.தீவுகள் 50 ஓவர்களில் எடுத்த ஓட்டங்களை இந்திய அணி 36.5 ஓவரில் எடுத்து இலக்கை கடந்து வெற்றிப் பெற்றது.

இதன்மூலன் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கோப்பையைக் கைப்பற்றியது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

MS Dhoni Fear: கேப்டன் கூல்-க்கு இவ்வளவு பயமா? - ஊசி என்றாலே தெறித்து ஓடும் தோனி..
மொடா குடி வார்னர்..! மூச்சுமுட்ட குடித்துவிட்டு போலீசிடம் வசமாக சிக்கிய டேவிட் வார்னர்..