
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் நாள் மற்றும் பிறந்தநாளில் இந்திய குண்டு எறிதல் வீராங்கனை மன்பிரீத் கெளர் தங்கம் வென்று இந்தியாவின் பதக்கக் கணக்கை தொடக்கி வைத்தார்.
அவருக்கு அடுத்தபடியாக ஆடவர் வட்டு எறிதல் பிரிவில் இந்தியாவின் விகாஸ் கெளடா வெண்கலப் பதக்கம் வென்றார்.
ஆசிய தடகள சாம்பியன்ஷிப்-22 ஒடிஸா மாநிலம் புவனேசுவரத்தில் நேற்றுத் தொடங்கியது.
இதில் மகளிர் குண்டு எறிதல் பிரிவில் இந்தியாவின் மன்பிரீத் கெளர் 18.28 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றார் வெற்றி பெற்றார். அவருக்கு நேற்று பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே பிரிவில் நடப்புச் சாம்பியனாக இருந்த சீனாவின் குவோ டியாகியான் 17.91 மீ தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கமும், ஜப்பானின் அயா ஓட்டா 15.45 மீ தூரம் எறிந்து வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
தங்கம் வென்ற மன்பிரீத் கெளர், ஆகஸ்ட் மாதம் இலண்டனில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.
ஆடவர் வட்டு எறிதல் பிரிவில் இந்தியாவின் விகாஸ் கெளடா 60.81 மீ தூரம் எறிந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
இந்தப் பிரிவில் ஈரானின் இஷான் ஹத்தாதி 64.54 மீ தூரம் எறிந்து தங்கத்தையும், மலேசியாவின் முகமது இர்ஃபான் 60.96 மீ தூரம் எறிந்து வெள்ளியையும் கைப்பற்றினர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.