
Wimbledon 2025 Prize Money: இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்து வந்த பாரம்பரியமிக்க விம்பிள்டன் 2025 டென்னிஸ் தொடர் கிளைமேக்சை எட்டி விட்டது. நேற்று மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவாவை போலந்து நாட்டின் இகா ஸ்வியாடெக் 6-0, 6-0 என்ற நேர் செட்களில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றார். இகா ஸ்வியாடெக் விம்பிள்டனில் முதல் சாம்பியன் பட்டம் வென்றார். ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் ஜானிக் சின்னரும், கார்லோஸ் அல்கராரும் இன்று மல்லுக்கட்டுகின்றனர்.
விம்பிள்டன் 2025ன் மொத்த பரிசுத்தொகை
விம்பிள்டன் 2025ன் மொத்த பரிசுத்தொகை £53.55 மில்லியன் பவுண்டுகள் ஆகும். இது கடந்த ஆண்டை விட 7% அதிகமாகும். விம்பிள்டனில் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் பெற்றும் வீரருக்கும், வீராங்கனைக்கும் ஒரே மாதிரியான பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. விம்பிள்டன் 2025 டென்னிஸ் போட்டி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக அமைந்துவிட்டது. இந்த ஆண்டுக்கான மொத்த பரிசுத் தொகை £53.55 மில்லியன் பவுண்டுகள் ஆகும். இது கடந்த ஆண்டை விட 7% அதிகமாகும். ஆண்கள் ஒற்றையர் மற்றும் பெண்கள் ஒற்றையர் சாம்பியன்களுக்கு சமமான பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.
ஒற்றையர் பிரிவில் சாம்பியன்களுக்கு எவ்வளவு பரிசு?
விம்பிள்டன் 2025 இல், ஆண்கள் ஒற்றையர் மற்றும் பெண்கள் ஒற்றையர் பிரிவுகளில் சாம்பியன் பட்டம் வெல்பவர்கள் தலா இந்திய மதிப்பில் சுமார் ₹30.75 கோடி முதல் ₹34.82 கோடி வரை பரிசுத்தொகை பெறுவார்கள். அதன்படி மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற போலந்து வீராங்கனை ₹30.75 கோடி முதல் ₹34.82 கோடி வரை பரிசுத்தொகை பெறுவார். இதேபோல் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்லும் ஜானிக் சின்னரும், கார்லோஸ் அல்கரார் ஆகிய இருவரில் ஒருவருக்கு மேற்கண்ட பரிசுத்தொகை கிடைக்கும்.
விம்பிள்டன் 2025 முழு பரிசுத்தொகை
விம்பிள்டன் 2025 இல் ரன்னர்-அப் ஆனவர்கள் ₹15.58 கோடி முதல் ₹17.41 கோடி வரை பரிசுத்தொகை பெறுவார்கள். அரையிறுதியில் தோற்றவர்கள் சுமார் ₹7.95 கோடி முதல் ₹8.87 கோடி வரை பெறுவார்கள். கால் இறுதியில் தோற்றவர்கள் ₹4.10 கோடி முதல் ₹4.58 கோடி வரை பெறுவார்கள். நான்காவது சுற்றுடன் சென்றவர்கள் ₹2.46 கோடி முதல் ₹2.74 கோடி வரையும், மூன்றாவது சுற்றுடன் சென்றவர்கள் ₹1.55 கோடி முதல் ₹1.74 கோடி வரையும், இரண்டாவது சுற்றுடன் சென்றவர்கள் சுமார் ₹99 லட்சம் முதல் ₹1.13 கோடி வரையும் பரிசுத்தொகையாக பெறுவார்கள். முதல் சுற்றுடன் நடையை கட்டியவர்கள் ₹67.65 லட்சம் முதல் ₹75.73 லட்சம் வரை பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.