விம்பிள்டன் 2025: அனிசிமோவாவை பந்தாடி சாம்பியன் பட்டம் வென்றார் போலந்தின் இகா ஸ்வியாடெக்!

Published : Jul 12, 2025, 10:34 PM IST
Iga Swiatek

சுருக்கம்

விம்பிள்டன் 2025 மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவாவை தோற்கடித்து போலந்தின் இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார்.

Iga Swiatek Wins Wimbledon 2025 Title: இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கோலாகலமாக நடந்து வந்த டென்னிஸ் 'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் மிக உயர்ந்த அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது. இதில் பல்வேறு அதிர்ச்சிகரமான தோல்விகள் தொடர்ந்து அரங்கேறின. அந்த வகையில் 7 முறை விம்பிள்டன் சாம்பியனான ஜோகோவிச் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இத்தாலியின் இளம் வீரர் ஜானிக் சின்னரிடம் 6-3, 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியை தழுவி வெளியேறினார்.

இகா ஸ்வியாடெக் சாம்பியன்

இந்நிலையில், மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவா போலந்து நாட்டின் இகா ஸ்வியாடெக்கை எதிர்கொண்டார். டென்னிஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த போட்டி முழுக்க முழுக்க இகா ஸ்வியாடெக்கின் வசம் இருந்தது. அவர் அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவாவை 6-0, 6-0 என்ற நேர் செட்களில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றார். இகா ஸ்வியாடெக் விம்பிள்டனில் சாம்பியன் பட்டம் வெல்லது இதுவே முதன்முறையாகும். அதே வேளையில் இது அவரது ஆறாவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும்.

தொடக்கம் முதல் இறுதி வரை ஆதிக்கம்

சென்டர் கோர்ட்டில் நடந்த இந்த இறுதிப்போட்டியை தொடக்கம் முதல் இறுதி வரை போலந்து நாட்டின் இகா ஸ்வியாடெக்கே தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். வெறும் 18 நிமிடங்களே நடந்த முதல் செட்டில் இகா ஸ்வியாடெக் 6-0 என்ற கணக்கில் வெற்றிவாகை சூடினார். சர்வ் மற்றும் ரிட்டர்ன் ஷாட்களில் கலக்கிய அவர் அமண்டா அனிசிமோவாவுக்கு ஒரு முறை கூட வாய்ப்பு கொடுக்கவில்லை.

மிகப்பெரும் வெற்றியை ருசித்த இகா ஸ்வியாடெக்

இறுதிப்போட்டி பதற்றம் காரணமாக அமண்டா அனிசிமோவா செய்த தவறுகளை இகா ஸ்வியாடெக் கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டார். இரண்டாவது செட்டிலும் இதே நிலை தான். இகா ஸ்வியாடெக்கின் அசாத்தியமான சர்வ் மற்றும் ரிட்டர்ன் ஷாட்களுக்கு முன்பு அமண்டா அனிசிமோவாவால் ஓன்றுமே செய்ய முடியவில்லை. இரண்டாவது செட்டிலும் ராணியாக திகழ்ந்த இகா ஸ்வியாடெக் இதையும் 6-0 என்ற கணக்கில் கைப்பற்றி மிகப்பெரும் வெற்றியை ருசித்தார். அரையிறுதியில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான அரினா சபலென்காவை வீழ்த்தி பைனலுக்கு வந்த அமண்டா அனிசிமோவா எந்தவித போராட்டமும் இன்றி சரணடைந்தது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.

போலந்து வீராங்கனைக்கு முதல் பட்டம்

விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் பைனலில் 6-0, 6-0 என்ற செட் கணக்கில் ஒரு வீராங்கனை மிகப்பெரிய வெற்றி பெறுவது இதுவே முதன்முறையாகும். மிகப்பெரிய வெற்றியை பெற்று சாம்பியன் பட்டம் வென்றுள்ள இகா ஸ்வியாடெக் டென்னிஸ் உலகில் தனது பெயரை முத்திரை பதித்துள்ளார். அத்துடன் விம்பிள்டனில் போலந்து நாட்டு வீராங்கனை சாம்பியன் பட்டம் வெல்வதும் இதுவே முதன்முறையாகும். இத்தகைய வரலாறு படைத்த இகா ஸ்வியாடெக்க்கு போலந்து மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

IND vs NZ: சிஎஸ்கே முன்னாள் வீரர் ருத்ரதாண்டவம்.. 2வது ஓடிஐயில் இந்தியாவை பந்தாடிய நியூசிலாந்து!
IND vs NZ: அதிரடி வீரர் கணித்தபடியே 2வது ஓடிஐயில் சொதப்பிய ரோகித், விராட் கோலி.. யார் சாமி இவரு!