டியூக்ஸ் பந்து டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தேவையில்லையா? Dukes ball மீது விமர்சனங்கள் எழுவது ஏன்?

Published : Jul 12, 2025, 07:02 PM IST
Dukes ball

சுருக்கம்

இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் டியூக்ஸ் பந்துகள் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த பந்துகளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

IND vs ENG: Why Is There So Much Criticism Of Dukes Balls?: இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. இதில் லீட்ஸில் நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும், பர்மிங்காமில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றன. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த டெஸ்ட் போட்டித் தொடர் தொடங்கியது முதல் டெஸ்ட் போட்டிகளில் பயன்படுத்தப்படும் 'டியூக்ஸ்' வகை பந்துகள் மீது தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

டியூக்ஸ் பந்துகள் மீதான விமர்சனம்

அதாவது முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து 3வது டெஸ்ட் போட்டி வரை டியூக்ஸ் பந்துகள் தொடர்ந்து மாற்றப்பட்டு வருகின்றன. பொதுவாக டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்தது 50 ஓவர்களுக்கு பிறகு தான் பந்துகள் மாற்றப்படும். ஆனால் இந்தியா, இங்கிலாந்து தொடரில் பந்துகளில் அடிக்கடி மாற்றப்பட்டு வருகின்றன. இந்த பந்துகள் விக்கெட் எடுக்க ஏதுவாக இல்லாததால் இந்திய வீரர்களும், இங்கிலாந்து வீரர்களும் பந்துகளை மாற்றும்படி அடிக்கடி நடுவர்களிடம் கோரிக்கை விடுத்தனர்.

டியூக்ஸ் பந்துகளிடம் என்ன குறை?

இந்த பந்துகள் மாற்றம் தொர்பாக இந்திய அணி வீரர்கள் ரிஷப் பண்ட், கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் நடுவர்களிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். டியூக்ஸ் பந்துகள் மீது என் இவ்வளவு விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன? என உங்களுக்கு கேள்வி எழலாம். டியூக்ஸ் பந்துகள் மிக விரைவாக மென்மையாகிவிடுகின்றன. இதனால் பந்து வீச்சாளர்களுக்கு விக்கெட் எடுப்பது கடினமாகிறது. பந்து மென்மையாவதால், அது ஸ்விங் ஆகாமல், பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக மாறிவிடுகிறது என்று பவுலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பந்துகள் அடிக்கடி மாற்றப்படுவது ஏன்?

டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை பந்துகள் நன்றாக பவுன்சும், ஸ்விங்குமானால் பவுலர்களால் விக்கெட் எடுக்க முடியும். பந்துகள் சுமார் 50 ஓவர்களுக்கு பிறகு தான் மென்மையை இழக்கும். அப்படி மென்மையை இழக்கும்போது பவுன்ஸ், ஸ்விங் ஆகாது. அப்போது தான் நடுவர்கள் பந்தை மாற்றுவார்கள். ஆனால் டியூக்ஸ் பந்துகளை பொறுத்தவரை புதிய பந்து எடுத்த 10 ஓவர்களுக்குள் மென்மையாகி விடுவதால் பந்து அதன் வடிவத்தை இழந்து சரியாக பவுன்ஸ் ஆகாமல், எதிர்பாராத திசையில் செல்லும். இதனால் இந்த பந்துகளை அடிக்கடி மாற்ற வேண்டிய நிலை ஏற்படுகிறது.

டியூக்ஸ் பந்துகள் வேண்டாம்

இதன் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 'டியூக்ஸ்' வகை பந்துகளை பயன்படுத்தக் கூடாது என்று முன்னாள் வீரர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். டியூக்ஸ் பந்துகள் இங்கிலாந்தில் தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் எஸ்.ஜி வகை பந்துகள் தான் பயன்படுத்தப்படுகின்றன. டியூக்ஸ் பந்துகள் பயன்படுத்தப்படுவதில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் டியூக்ஸ், கூக்கபுரா, எஸ்.ஜி என 3 வகையான பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 3 வகையான பந்துகள்

டியூக்ஸ் பந்துகள் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ்களிலும், கூக்கபுரா பந்துகள் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து உள்ளிட்ட சில ஆசிய நாடுகளிலும், எஸ்.ஜி பந்துகள் இந்தியாவிலும் பயன்படுத்தப்படுகின்றன. எஸ்.ஜி பந்துகள் அதிகம் சீம் ஆகும். ஸ்பின்னர்களுக்கு நன்கு கைகொடுக்கும். கூக்கபுரா பந்து தொடக்கத்தில் நன்றாக ஸ்விங் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இதுதான் bazball ஆட்டம்..! இங்கிலாந்துக்கு பாடம் கற்பித்த ஆஸ்திரேலியா! 3 பேர் அதிரடி அரை சதம்!
வார்த்தையை விட்ட விராட் கோலி..! பிசிசிஐ அதிருப்தியால் மனம் மாற்றம்..! நடந்தது என்ன?