
IND vs ENG: Indian Players Mock England Batsman Zak Crawley: இந்தியா-இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜோ ரூட் (104 ரன்) சதம் விளாசினார். ஜேமி ஸ்மித் (51), பிரைடன் கார்ஸ் (56) அரை சதம் விளாசினார்கள். இந்திய அணி தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இந்திய அணி ஆல் அவுட்
பின்பு தனது முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி இங்கிலாந்து எடுத்த அதே 387 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் கே.எல்.ராகுல் சூப்பர் சதம் (100 ரன்) விளாசி அசத்தினார். இக்கட்டான நிலையில் இருந்து அணியை மீட்ட ரிஷப் பண்ட் (74), ஜடேஜா (72) ஆகியோர் அரை சதம் அடித்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டுகளையும் ஜோப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.
கடைசி ஓவரில் நடந்த சுவாரஸ்யம்
இந்திய அணி ஆட்டமிழந்தபோது ஆட்டம் முடிவடையும் தறுவாயில் இருந்தது. இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து வீரர்கள் பேட்டிங் செய்ய வந்தனர். சாக் க்ரொலி, பென் டெக்கெட் களமிறங்கினார்கள். நேரமாகி விட்டதால் ஒரு ஓவர் மட்டுமே வீசப்பட்டும் என்ற நிலையில் இருந்தது. அந்த ஒரு ஓவரை ஜஸ்பிரித் பும்ரா வீசினார். அப்போது பும்ராவின் முதல் பந்தை விட்ட க்ரொலி, 2வது பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தார்.
பும்ரா பந்துக்கு பயந்த சாக் க்ரொலி
3வது பந்தை பும்ரா வீச வந்தபோது க்ரொலி தனக்கு நேராக யாரோ நிற்பதாகவும் இதனால் கவனச்சிதறல் ஏற்பட்டதாக கூறி பந்தை சந்திக்காமல் ஸ்டெம்பில் இருந்து விலகினார். ஆனால் க்ரொலி கூறியபடி யாருமே இல்லை. இதனால் கோபம் அடைந்த சுப்மன் கில் க்ரொலியிடம் சென்று 'ஏன் வேண்டுமென்றே தாமதம் செய்கிறீர்கள்' என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதேபோல் மற்ற இந்திய வீரர்களும் அங்கு திரண்டு வந்தனர்.
அடுத்து வலி ஏற்பட்டதாக கூறி நாடகம்
சுப்மன் கில்லிடம் ஏதோ பேசி விட்டு அடுத்த பந்தை பந்தை சாக் க்ரொலி சந்தித்தபோது பந்து அவரது க்ளவுசை தாக்கியது. இதனால் அவர் விரல் வலிப்பாதாக கூறி அணியின் பிசியோவை உடனே வரவழைத்தார். பிசியோவும் உடனே வந்து அவரது கைக்கு ஸ்பிரோ ஏதும் அடிக்காமல் சென்றார். சாக் க்ரொலி பொய் சொல்வதாக நினைத்து சுப்மன் கில் மீண்டும் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடனே பென் டக்கெட் ஏதோ பேச, கில் அவரிடமும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
கேப்டன் சுப்மன் கில் வாக்குவாதம்
மற்ற இந்திய வீரர்களும் கில்லுக்கு ஆதரவாக வந்தனர். பின்னர் நடுவர் தலையியிட்டு வாக்குவாதத்தை முடித்து வைத்தார். ஆட்டம் முடிய கடைசி ஒரு ஓவரே இருக்கும் நிலையில், சாக் க்ரொலி அவுட்டாகி விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு வேண்டுமென்றே பந்தை எதிர்கொள்ள முயலாமல் தடுக்க முயன்றார். இதற்கு இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்தான்ர்.
கலாய்த்த இந்திய வீரர்கள்
பின்பு மீதி பந்தை எதிர்கொண்டு 3ம் நாள் ஆட்டம் முடிந்ததும் சாக் க்ரொலி பெவிலியனுக்கு திரும்பியபோது, இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் உள்ளிட்ட வீரர்கள், ''ப்ந்துகளை எதிர்கொள்ள பயப்படுறியா குமாரு'' என்பதுபோல் சாக் க்ரொலியை கிண்டல் செய்தனர். ஆனால் க்ரொலி ஏதும் சொல்லாமல் அமைதியாக பெவிலியன் சென்றார். இங்கிலாந்து அணி 2/0 என்ற நிலையில் நாளை 4ம் நாள் ஆட்டம் நடக்கிறது.