wimbledon 2022 : கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பாரம்பரியமான விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க ரஷ்ய வீரர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பாரம்பரியமான விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க ரஷ்ய வீரர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால், ஏற்கெனவே ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யவும் பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள் தடை விதித்துள்ளன. இந்த சூழலில் லண்டனில் நடக்கும் விம்பிள்டன் டென்னிஸ்போட்டியில் பங்கேற்கவும் ரஷ்ய வீரர்களுக்கு அனுமதி வழங்கப்படாது எனத் தெரிகிறது.
அனைத்து இங்கிலாந்து டென்னிஸ் கிளப் நேற்று எடுத்த முடிவின்படி, விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ரஷ்ய வீரர்கள் பங்கேற்க அனுமதிக்ககூடாது என்று முடிவு எடுத்துள்ளது. ஆனால், ஏடிபி மற்றும் டபிள்யுடிஏ டூபக்லிலும், சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பின் போட்டிகளஇலும் ரஷ்ய வீரர்களும், பெலாரஸ் வீரர்களும் பங்கேற்கத் தடை ஏதும் விதிக்கப்படவில்லை. ஆனால், போட்டிகளில் அவர்கள் ரஷ்ய கொடியை காண்பிக்கவோ அல்லது தேசிய கீதத்தையே பாடவோ கூடாது.
ஆனால், டேவிஸ் கோப்பை, பில்லி ஜீன் கிங் கோப்பையில் விளையாட ரஷ்யா, பெலாரஸ் வீரர், வீராங்கனைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
விளம்பிள்டன் நிர்வாகத்தின் முடிவால் உலகின் 2-ம் நிலையில் இருக்கும் ரஷ்ய வீரர் மெத்வதேவ், 8ம்நிலை வீரர் ஆன்ட்ரே ரூபல்வ் ஆகியோர் விம்பிள்டன் போட்டியில் பங்கேற்க முடியாது. மகளிர் பிரிவில் அனஸ்தாசியா பால்சென்கோவா(தரவரிசையில் 15), டாரியா கசாட்கினா(26-வது இடம்), வெரோனிகா குடர்மெடோவா ஆகியோரின் பங்கேற்பும் தடை ஏற்படும்.
லண்டனில் வெளியாகும் தி ஸ்போர்ட்டிகோ ஏடு வெளியிட்ட செய்தியில், “ வரும் ஜூன் 17ம்தேதி தொடங்கும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ரஷ்ய வீரர், வீராங்கனைகள் பங்கேற்க அனுமதிகிடையாது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பெலாரஸ் வீரர்களுக்கு அனுமதியளி்க்கப்படுமா என்பது தெளிவாகவில்லை. ஆனால், விளாதிமிர் புதினின் ஆதரவு பெலாரஸுக்கு இருப்பதால் அந்த நாட்டு வீரர், வீராங்கனைகளுக்கும் அனுமதி இருக்காது. அர்யானா சபலென்கா(தரவரிசை4), விக்டோரியா அசரென்கா(தரவரிசை18) ஆகிய இருவருமே பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
லான் டென்னிஸ் கூட்டமைப்பு, விளம்பிள்டனில் ரஷ்ய வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க தடை விதிப்பது குறித்து பிரிட்டன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியபின்புதான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
சமீபத்தில் பிரிட்டன் விளையாட்டுத்துறை அமைச்சர் நிகில் ஹடில்ஸ்டன் கூறுகையில், “யாரும் ரஷ்ய கொடியுடன் இங்கு வரக்கூடாது. அவ்வாறு வருவோருக்கு அனுமதியில்லை. ரஷ்ய வீரர்களுக்கு புதினின் சிந்தனைகளை விதைக்கவிடமாட்டோம்” எனத் தெரிவித்திருந்தார்