maria sharapova husband : ரஷ்யாவின் முன்னாள் டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா தனது 35-வது பிறந்நாளை நேற்று கொண்டாடியபோது, தான் கர்ப்பமாக இருப்பதை தெரிவித்தார்.
ரஷ்யாவின் முன்னாள் டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா தனது 35-வது பிறந்நாளை நேற்று கொண்டாடியபோது, தான் கர்ப்பமாக இருப்பதை தெரிவித்தார்.
5 முறை கிராண்ட்ஸ்லாம்
ரஷ்யாவைச் சேர்ந்த முன்னாள் டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா 5 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர். கடந்த 2020ம் ஆண்டு கொரோனா தொற்றுக்கு முன்பாக டென்னிஸ் விளையாட்டியிலிருந்து ஓய்வு பெற்றார்.
விலைமதிப்பில்லா தொடக்கம்
இந்நிலையில் மரியா ஷரபோவா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தான் முதல் குழந்தைக்கு தாயாகப் போகிறேன் எனத் தெரிவித்துள்ளார். அதில் “ விலைமதிப்பில்லா தொடக்கம்” என்ற வாசகத்தை பதிவிட்டு நீச்சல் உடையில் கடற்கரையில் நின்றவாறு புகைப்படத்தை ஷரபோவா பதிவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் இருவருக்கும் சேர்த்து பிறந்தநாள் கேக் சாப்பிடுவது என்னுடைய சிறப்பு என்று ஷரபோவா தெரிவித்துள்ளார்
கணவர் யார்?
கடந்த 2020 டிசம்பர் மாதம் ஷரோபோவா, பிரிட்டனைச் சேர்ந்த தொழிலதிபர் அலெக்சாண்டர் கில்க்ஸுடன் நெருக்கமாக இருப்பதை தெரிவித்து இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போவதாக அறிவித்தார். ஷரபோவா ரஷ்ய நாட்டைச் சேர்ந்தவர் என்றாலும், டென்னிஸ் உலகில் காலடி வைத்தது முதல் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
மரியா ஷரபோவா திருமணம் செய்யப் போகும் அலெக்சாண்டர் கில்க்ஸ் குறித்த ஸ்வாரஸ்யனமான தகவல் என்னவென்றால், அமெரிக்காவைச் சேர்ந்த பேஷன் டிசைனர் மிஷா நோனோவை கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்து விவாகரத்து செய்துள்ளார். நடிகை மேகன் மார்கிலின் நெருங்கிய தோழி மிஷா என்பது குறிப்பிடத்தக்கது.
இளவரசர்களுக்கு நண்பர்
அதுமட்டுல்லாமல் பிரி்ட்டன் இளவரசர்கள் வில்லியம், மற்றும் ஹாரியின் நெருங்கிய நம்பர் அலெக்சாண்டர். இவர்கள் மூவரும் ஒரே பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். இளவரசர் வில்லியம், கேட் திருமணத்துக்கு சிறப்பு அழைப்பாளராகவும் அலெக்சாண்டர் சென்றிருந்தார்.
ஷரபோவாவுக்கும், அலெக்சாண்டருக்கும் இன்னும் முறைப்படி திருமணமாகவில்லை. இருவரும் நிச்சயதார்த்தம் மட்டுமே நடந்துள்ளதே தவிர அதிகாரபூர்வமாக திருமணம் குறித்து எந்தத் தேதியையும் அறிவிக்கவில்லை.
டென்னிஸிலிருந்து ஷரபோவா ஓய்வு பெற்றபின் ஊடகங்கள் வெளிச்சத்திலிருந்து ஒதுங்கியே இருந்த நிலையில் ஏறக்குறைய 2 ஆண்டுகளுக்குப்பின் அவர் வெளியிடும் மிகப்பெரிய அறிவிப்பு இதுவாகும்.