என்னை பொறுத்தமட்டில் Mr.IPL-னா அது இவர் தான்.. ரெய்னா, கோலி, ரோஹித், வார்னர், கெய்ல்லாம் இல்ல! ஸ்வான் கருத்து

Published : Apr 19, 2022, 08:20 PM IST
என்னை பொறுத்தமட்டில் Mr.IPL-னா அது இவர் தான்.. ரெய்னா, கோலி, ரோஹித், வார்னர், கெய்ல்லாம் இல்ல! ஸ்வான் கருத்து

சுருக்கம்

ஐபிஎல்லில் பல வீரர்கள் அபாரமாக பேட்டிங் ஆடிவரும் நிலையில், தன்னை பொறுத்தமட்டில் யார் மிஸ்டர்.ஐபிஎல் என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் க்ரேம் ஸ்வான் தெரிவித்துள்ளார்.  

ஐபிஎல்லில் 14 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டு, 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஐபிஎல்லில் சுரேஷ் ரெய்னா, விராட் கோலி, ரோஹித் சர்மா, கிறிஸ் கெய்ல், தோனி, டேவிட் வார்னர், டிவில்லியர்ஸ் ஆகிய வீரர்கள் அபாரமாக விளையாடி ஐபிஎல்லின் வெற்றிகரமான வீரர்கள் என பெயர் எடுத்துள்ளனர்.

இன்றைக்கு சீண்ட ஆள் இல்லாமல் இருக்கும் ரெய்னா தான் ஒரு காலத்தில் மிஸ்டர் ஐபிஎல் என அழைக்கப்பட்டார். ரெய்னா, கோலி, ரோஹித், தோனி, டிவில்லியர்ஸ், கெய்ல், வார்னர் ஆகிய அனைவருமே ஐபிஎல்லின் சிறந்த வீரர்களாகத்தான் பார்க்கப்படுகிறார்கள். 

ஆனால் ஐபிஎல்லில் மிகச்சிறப்பாக விளையாடி, 5989 ரன்களுடன் ஐபிஎல்லில் அதிக ரன்களை குவித்த வீரர்களில் விராட் கோலிக்கு அடுத்து 2ம் இடத்தில் இருக்கும் ஷிகர் தவானுக்குத்தான் அவருக்கு தகுதியான அளவிற்கான அங்கீகாரமோ பெயரோ கிடைக்கவில்லை. ரோஹித் சர்மா, வார்னர், கெய்ல் ஆகிய பெரிய வீரர்களை விட அதிகமான ரன்களை குவித்தும் கூட, குறைத்து மதிப்பிடப்பட்ட வீரர் தவான் ஆவார்.

இந்த சீசனில் பஞ்சாப் அணிக்காக ஆடும் தவான், இந்த சீசனிலும் அபாரமாக பேட்டிங் ஆடிவரும் நிலையில், அவர் தான், தன்னை பொறுத்தமட்டில் மிஸ்டர்.ஐபிஎல் என்று இங்கிலாந்து முன்னாள் ஸ்பின்னர் க்ரேம் ஸ்வான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசிய க்ரேம் ஸ்வான், என்னை பொறுத்தமட்டில் மிஸ்டர்.ஐபிஎல் என்றால் அது தவான் தான். இந்த சீசனிலும் அபாரமாக ஆடிவருகிறார். அவர் பேட்டிங் ஆடும் ஒவ்வொரு நிமிடத்தையும் நான் ஆவலுடன் பார்ப்பேன். ஷிகர் தவான் களத்திற்கு வந்ததும் எக்ஸ்ட்ரா கவர் திசையில் சிக்ஸர் அடிக்கிறார் என்றால், அவர் செம ஃபார்மில் இருக்கிறார் என்றும் அன்றைய தினம் அவருடையது என்றும் அர்த்தம். ஸ்கொயர், ஸ்டிரைட், லெக் திசை என அனைத்து திசைகளிலும் பலமானவர் தவான். அருமையான வீரர் என்று க்ரேம் ஸ்வான் புகழாரம் சூட்டியுள்ளார். 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!