IPL 2022: பெஸ்ட் டி20 பிளேயர் இவர் தான்..! அதிரடி வீரருக்கு மைக்கேல் வான் புகழாரம்

Published : Apr 19, 2022, 06:18 PM IST
IPL 2022: பெஸ்ட் டி20 பிளேயர் இவர் தான்..! அதிரடி வீரருக்கு மைக்கேல் வான் புகழாரம்

சுருக்கம்

ஜோஸ் பட்லர் தான் சமகால கிரிக்கெட்டின் சிறந்த டி20 வீரர் என்று புகழாரம் மைக்கேல் வான் புகழாரம் சூட்டியுள்ளார்.  

ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ஆர்சிபி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் சிறப்பாக ஆடி வெற்றிகளை குவித்துவருகின்றன.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஜோஸ் பட்லரின் அதிரடியான பேட்டிங்கால் வெற்றி பெற்றுவருகிறது. இங்கிலாந்து வீரரான ஜோஸ் பட்லர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர வீரராக கடந்த சில ஆண்டுகளாக ஜொலித்துவருகிறார்.

இந்த சீசனில் அபாரமாக பேட்டிங் ஆடியுள்ள பட்லர், 6 இன்னிங்ஸ்களில் 2 சதங்களுடன் 375 ரன்களை குவித்து ஆரஞ்சு தொப்பியை அவர்தான் வைத்துள்ளார்.

கேகேஆருக்கு எதிராக நேற்று ஆடிய போட்டியில் அதிரடியாக பேட்டிங் ஆடி 61 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 103 ரன்களை குவித்தார் பட்லர். ஒரே சீசனில் 2 சதங்கள் விளாசியுள்ளார். இந்த சீசனில் இன்னும் நிறைய போட்டிகள் இருப்பதால், அவர் இருக்கும் ஃபார்முக்கு இன்னும் சில சதங்கள் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஜோஸ் பட்லர் தான் டி20 கிரிக்கெட்டின் சிறந்த வீரர் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் புகழாரம் சூட்டியுள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

IND vs SA 2nd T20: ஒரு வழியாக டாஸ் வென்ற SKY.. இந்திய அணி பிளேயிங் லெவன் இதோ!
வெறித்தனமான CSK ரசிகர்.. திருமணத்துக்கு முன் மாப்பிள்ளை போட்ட கிரிக்கெட் ஒப்பந்தம்!