
சமகால கிரிக்கெட்டில் அசைக்க முடியாத மாபெரும் சாதனை வீரர்களாகவும் கேப்டன்களாகவும் திகழ்பவர்கள் கோலியும் ஸ்டீவ் ஸ்மித்தும்.
ஒவ்வொரு போட்டியிலும் பரஸ்பரம் சாதனைகளை முறியடித்து புதிய சாதனைகளை படைத்து வரும் கோலியும், ஸ்மித்தும் கேப்டன்களாகவும் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சிறந்தவர்களாக திகழ்கின்றனர்.
சமகாலத்தில் இரு பெரும் ஜாம்பவன்களாக திகழும் இவர்களில் யார் பெஸ்ட்? என்ற கேள்விக்கு, இவர் தான் என சட்டென பதிலளிப்பது சற்று சிரமம்தான். ஏனெனில் அந்த அளவிற்கு இருவரும் வீரராகவும் கேப்டனாகவும் சாதனைகளை குவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரரும் தற்போதைய 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியின் பயிற்சியாளருமான டிராவிட், கோலி, ஸ்மித் ஆகிய இருவரில் கோலி தான் பெஸ்ட் என நெற்றியில் அடித்தாற்போல பதிலளித்துள்ளார்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள டிராவிட், கோலியும் ஸ்மித்தும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. இருவருமே தனிப்பட்ட முறையிலும் கேப்டனாகவும் சிறப்பாக செயல்படுகின்றனர். ஆனால் கோலி, தற்போது ஃபார்மின் உச்சத்தில் இருக்கிறார். டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று விதமான கிரிக்கெட்டிற்கும் ஏற்ற வகையில் தன்னை மாற்றிக்கொள்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஆனால் அதை கோலி சிறப்பாக செய்கிறார். எனவே என்னை பொறுத்தவரை ஸ்மித்தைவிட கோலி ஒருபடி மேல்தான் என டிராவிட் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.