
இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் டக் அவுட்டில் புதிய சாதனை படைத்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என இந்திய அணி வென்றது.
இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி தர்மசாலாவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் திசாரா பெரேரா முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார்.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஷிகர் தவனும் ரோஹித் சர்மாவும் அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சியளித்தனர். இவர்களைத் தொடர்ந்து தினேஷ் கார்த்திக், மணீஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்குமார் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிய மறுமுனையில் தோனி அரைசதம் கடந்தார். 10 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 65 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக தோனி அவுட்டானார். 38.2 ஓவரின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112 ரன்களை மட்டுமே இந்திய அணி எடுத்தது.
இந்த போட்டியில் ஷிகர் தவன், தினேஷ் கார்த்திக், புவனேஷ்குமார், பும்ரா ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகினர். அவர்களில் தினேஷ் கார்த்திக், 18 பந்துகள் பேட்டிங் செய்து ஒரு ரன் கூட எடுக்காமல் டக் அவுட்டானார். இதன்மூலம், ஒருநாள் போட்டியில் அதிக பந்துகள் பிடித்து டக் அவுட் ஆனவர்கள் வரிசையில் தினேஷ் கார்த்திக் முதலிடம் பிடித்துள்ளார்.
இந்த வரிசையில், 16 பந்துகள் பிடித்து டக் அவுட்டாகி முன்னாள் கேப்டன் கங்குலி 4வது இடத்தில் உள்ளார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.