தனது சாதனையை தானே முறியடித்து கர்ஜிக்கும் இங்கிலாந்து... என்ன சாதனை?

First Published Jun 20, 2018, 2:35 PM IST
Highlights
What is the achievement of England that defeats his own record?


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 481 ஓட்டங்கள் குவித்து தனது முந்தைய சாதனையை தானே முறியடித்துள்ளது.

இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் 3-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. 

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்தை பேட்டிங்க் செய்ய சொன்னது. இதனைத் தொடா்ந்து ஜேசன் ராய், ஜானி போ்ஸ்டோ கூட்டணி களமிறங்கி கணக்கை தொடங்கியது.

ஜேசன் ராய், ஜானி போ்ஸ்டோ, ஆலெக்ஸ் ஹேல்ஸ், இயன் மார்கன் ஆகியோர் சிறப்பான பங்களிப்பை அளித்தனா். அதன்படி, ஜேசன் ராய் 82 ஓட்டங்கள், ஜானி போ்ஸ்டோ  139 ஓட்டங்கள், ஹேல்ஸ் 147 ஓட்டங்கள், இயன் மார்கன் 67 ஓட்டங்கள் குவித்தனா்.

தொடா்ந்து சிறப்பாக ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவா் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 481 ஓட்டங்கள் குவித்து இமாலய சாதனை படைத்துள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 444 ஓட்டங்கள் சோ்த்திருந்த நிலையில் தற்போது அதைவிட அதிகமாக எடுத்து அசத்தியுள்ளது. 

இந்த நிலையில் 481 ஓட்டங்கள் குவித்து தனது சாதனையை தானே முறியடித்து கர்ஜிக்கிறது இங்கிலாந்து.

tags
click me!