
இலண்டன் கிளாசிக் செஸ் போட்டியின் 4-ஆவது சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், பிரிட்டனின் மைக்கேல் ஆடம்ஸுடன் டிரா செய்தார்.
இலண்டனில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் 4-ஆவது சுற்றில் ஆனந்த் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருந்தபோதும் அவர் கடைசியில் கோட்டைவிட்டார்.
அமெரிக்காவின் ஹிகாரு நாகமுரா தனது 4-ஆவது சுற்றில் பல்கேரியாவின் வெஸலின் டோபலோவைத் தோற்கடித்தார். எஞ்சிய 4-ஆவது சுற்று ஆட்டங்கள் அனைத்தும் டிராவில் முடிந்தன.
தற்போதைய நிலையில் அமெரிக்காவின் வெஸ்லே 3 புள்ளிகளுடன் தனி முன்னிலை பெற்றுள்ளார்.
ரஷியாவின் விளாதிமிர் கிராம்னிக், அமெரிக்காவின் பாபியானோ கருணா, ஆர்மேனியாவின் லெவோன் ஆரோனியன், அமெரிக்காவின் ஹிகாரு நாகமுரா ஆகியோர் 2.5 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்தில் உள்ளனர்.
ஆனந்த், நெதர்லாந்தின் அனிஷ் கிரி ஆகியோர் தலா 2 புள்ளிகளுடன் 6-ஆவது இடத்தில் உள்ளனர்.
பிரான்ஸின் மேக்ஸைம் 1.5 புள்ளிகளுடன் 8-ஆவது இடத்திலும், வெஸலின் டோபலோவ் 0.5 புள்ளியுடன் 9-ஆவது இடத்திலும் உள்ளனர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.