இறுதிச்சுற்றில் கால் வைத்தது கேரளா…

 
Published : Dec 15, 2016, 11:13 AM ISTUpdated : Sep 19, 2018, 02:48 AM IST
இறுதிச்சுற்றில் கால் வைத்தது கேரளா…

சுருக்கம்

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரில் 2-ஆவது அணியாக இறுதிச்சுற்றில் கால் வைத்தது கேரள பிளாஸ்டர்ஸ்.

வரும் 18-ஆம் தேதி கொச்சியில் நடைபெறும் இறுதிச்சுற்றில் கொல்கத்தாவை சந்திக்கிறது கேரளம்.

2-ஆவது அரையிறுதியின் 2-ஆவது சுற்றில் டெல்லி 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. இதையடுத்து இரு அணிகளும் தலா ஒரு வெற்றி, இரு கோல்களுடன் சமநிலையில் இருந்தன. இதன்பிறகு இறுதிச்சுற்றுக்கு முன்னேறும் அணியைத் தீர்மானிப்பதற்காக நடைபெற்ற பெனால்டி ஷூட் அவுட்டில் கேரள அணி 3-0 என்ற கோல் கணக்கில் டெல்லியை பந்தாடியது.

தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தின் ஆரம்பம் முதலே இரு அணிகளும் அபாரமாக ஆட, விறுவிறுப்பாக நகர்ந்தது. 21-ஆவது நிமிடத்தில் டெல்லி வீரர் ஒருவர் கோல் கம்பத்தை நோக்கி விரட்டிய பந்தை கேரள வீரர் கேடியோ தடுத்தார். ஆனால் அது நேரடியாக டெல்லி வீரர் மார்செலோவிடம் செல்ல அவர், அதை எளிதாக கோலாக்கினார்.

ஆனால் அடுத்த 3-ஆவது நிமிடத்திலேயே டெல்லி அணிக்கு பதிலடி கொடுத்தது கேரளம். ஜோசு கொடுத்த பாஸிஸ் டக்கென்ஸ் கோலடிக்க, இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன. 28-ஆவது நிமிடத்தில் கேரள வீரர் மெஹ்தாப் ஹுசைன் மீது காலால் உதைத்ததற்காக டெல்லி வீரர் மிலன் சிங்கிற்கு நடுவர் ரெட் கார்டு கொடுக்க, அவர் வெளியேறினார். இதனால் அந்த அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது.

41-ஆவது நிமிடத்தில் டெல்லியின் கோல் வாய்ப்பை கேரள கோல் கீப்பர் நேன்டி முறியடிக்க, தொடர்ந்து போராடிய டெல்லி அணி முதல் பாதி ஆட்டத்தின் "இஞ்சுரி' நேரத்தில் 2-ஆவது கோலை அடித்தது. இந்த கோலை மார்கஸ் உதவியுடன் ரூபன் அடித்தார்.

பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தில் கோல் எதுவும் விழாத நிலையில் டெல்லி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.

ஆனால் முதல் சுற்று அரையிறுதியில் கேரள அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்ததால், இரு சுற்றுகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி, தலா 2 கோல்களுடன் சமநிலையில் இருந்தன.

இதையடுத்து வெற்றியைத் தீர்மானிக்க கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதிலும் கோல் விழாததால் பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பு வழங்கப்பட்டது.

அதில் கேரள அணி தனது 4 வாய்ப்புகளில் மூன்றை கோலாக்கியது. அதேநேரத்தில் டெல்லி வீரர்கள் தங்களின் முதல் இரு வாய்ப்புகளில் பந்தை கோல் கம்பத்துக்கு மேலே தூக்கியடித்தனர்.

3-ஆவது வாய்ப்பில் டெல்லி வீரரின் கோல் முயற்சியை கேரள கோல் கீப்பர் முறியடித்தார். இதனால் கேரளம் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டு இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.  

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

விஜய் ஹசாரே டிராபியில் கோலி மிரட்டல் சதம்.. 16000 ரன்களை கடந்து புதிய சாதனை
'பும்ரா, ரிஷப் பண்ட் என்னிடம் மன்னிப்பு கேட்டனர்'.. உருவக் கேலி குறித்து மனம் திறந்த பவுமா..!