
உலகின் மிகச்சிறந்த கால்பந்து வீரர்கள்' பட்டியலில் போர்ச்சுகலைச் சேர்ந்த ரியல் மாட்ரிட் அணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 4-ஆவது முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்தவரும், பார்சிலோனா அணி வீரருமான லயோனல் மெஸ்ஸி, 2-ஆவது இடத்தைப் பிடித்தார். பிரான்ஸ் வீரர் ஆன்டோனி கிரிஸ்மான் 3-ஆவது இடத்தில் உள்ளார்.
இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிரான்ஸ் கால்பந்து இதழ் வெளியிடவிருந்த நிலையில், திங்கள்கிழமை சில ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.
இந்த மகிழ்ச்சி குறித்து ரொனால்டோ கூறுகையில், "ஒரு கனவு மீண்டும் நிஜமாகியுள்ளது. 4-ஆவது முறையாக இந்த விருதை பெற இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இதற்காக எனது அணியின் சக வீரர்கள், ரியல் மாட்ரிட் அணி, இதர மக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.