
இந்திய பிஸ்டல் சுடுதல் விளையாட்டின் தலைமை பயிற்சியாளர் செய்யது வாஜித் அலி (59) மாரடைப்பால் திங்கள்கிழமை காலமானார்.
புணேவின் சத்ரபதி சிவாஜி விளையாட்டரங்க வளாகத்தில் நடைபெற்ற 60-ஆவது தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் நடுவராக செயல்பட்டுக் கொண்டிருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து, ரைபிள் சுடுதலுக்கான இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரும், போட்டி ஒருங்கிணைப்பாளருமான பவன் சிங் கூறியதாவது:
“நடுவராகச் செயல்பட்டுக் கொண்டிருந்த செய்யது வாஜித் அலிக்கு, இரவு 8 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றோம்.
எனினும், அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் 9 மணியளவில் அறிவித்தனர் என்று பவன் சிங் கூறினார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.