
ஐசிசி கனவு மகளிர் கிரிக்கெட் அணியில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இடம்பிடித்துள்ளார்.
ஐசிசி முதல்முறையாக மகளிர் கனவு அணியை தேர்வு செய்துள்ளது. 2015 செப்டம்பர் 14 முதல் 2016 செப்டம்பர் 20 வரையிலான காலத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கனவு அணியின் கேப்டனாக மேற்கிந்தியத் தீவுகளின் ஸ்டெபானி டெய்லர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கனவு அணி விவரம் (பேட்டிங் வரிசைப்படி):
சுஸீ பேட்ஸ் (நியூஸிலாந்து), ரஹேல் பிரைஸ் (நியூஸிலாந்து, விக்கெட் கீப்பர்), ஸ்மிருதி மந்தனா (இந்தியா), ஸ்டெபானி டெய்லர் (மேற்கிந்தியத் தீவுகள், கேப்டன்), மெக் லேனிங், எல்லிஸ் பெர்ரி (இருவரும் ஆஸ்திரேலியா), ஹெதர் நைட் (இங்கிலாந்து), டியான்ட்ரா டாட்டின் (மேற்கிந்தியத் தீவுகள்), சுனே லஸ் (தென் ஆப்பிரிக்கா), அன்யா ஷ்ரப்சோல் (இங்கிலாந்து), லெய் காஸ்பெரீக் (நியூஸிலாந்து) மற்றும் கிம் கேரத் (அயர்லாந்து).
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.