நாங்கதாங்க பெஸ்ட்.. செய்தியாளரிடம் கோபப்பட்ட கோலி!! என்ன பண்ணாருனு நீங்களே பாருங்க.. வீடியோ

By karthikeyan VFirst Published Sep 12, 2018, 12:52 PM IST
Highlights

இந்திய அணி குறித்த கேள்விக்கு கேப்டன் விராட் கோலி, பத்திரிகையாளரிடம் கோபத்தை காட்டியுள்ளார்.
 

இந்திய அணி குறித்த கேள்விக்கு கேப்டன் விராட் கோலி, பத்திரிகையாளரிடம் கோபமாக பதிலளித்துள்ளார்.

இந்தியா இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரை 1-4 என இந்திய அணி இழந்தது. இந்திய அணியின் மோசமான பேட்டிங்கால்தான் தொடரை இழக்க நேரிட்டது. முதல் மற்றும் நான்காவது போட்டிகளில் வெற்றியை நெருங்கிய இந்திய அணி, தோல்வியை தழுவியது. அந்த போட்டிகளில் வீரர்கள் சற்று பொறுப்புடன் பேட்டிங் ஆடியிருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம்.

தொடரை இழந்ததன் எதிரொலியாக வீரர்கள் தேர்வு உள்ளிட்ட பல விவகாரங்கள் தொடர்பாக பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும்  கேப்டன் விராட் கோலி மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த தோல்விக்கு அவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. 

முதல் இரண்டு போட்டிகளில் தோற்றதும் எழுந்த விமர்சனங்களுக்கு, மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்ற பிறகு பதிலடி கொடுத்த ரவி சாஸ்திரி, தற்போதைய இந்திய அணிதான் வெளிநாடுகளில் சிறப்பாக ஆடுகிறது என மார்தட்டினார். நான்காவது போட்டியில் மீண்டும் தோல்வியை தழுவியதை அடுத்து, தற்போதைய இந்திய அணிதான் வெளிநாடுகளில் சிறப்பாக ஆடுகிறது என்று வாயில் சொன்னால் போதாது; களத்தில் காட்ட வேண்டும். எனவே வாய்ச்சொல்லை நிறுத்திவிட்டு செயலில் காட்டுங்கள் என ரவி சாஸ்திரிக்கு சேவாக் பதிலடி கொடுத்தார். 

சேவாக், கங்குலி உள்ளிட்டோரின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கடந்த 20 ஆண்டுகளில் தற்போதைய இந்திய அணி தான் வெளிநாடுகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறது என மீண்டும் தெரிவித்தார். இதை கேட்டு கடுப்பான கவாஸ்கர், டிராவிட் தலைமையிலான சச்சின், கங்குலி, லட்சுமணன், கும்ப்ளேவை உள்ளடக்கிய இந்திய அணி வெளிநாடுகளில் பெற்ற வெற்றிகளை பட்டியலிட்டு பதிலடி கொடுத்தார். கங்குலியும் ரவி சாஸ்திரிக்கு பதிலடி கொடுத்திருந்தார். 

இந்நிலையில், கடைசி டெஸ்ட் போட்டியிலும் தோல்வியடைந்து 1-4 என தொடரை இழந்த இந்திய அணியின் கேப்டன், தொடர் முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தற்போதைய இந்திய அணி தான் கடந்த 15 ஆண்டுகளில் சிறந்த அணி என்ற கூற்றை நீங்கள் நம்புகிறீர்களா? என்ற கேள்விக்கு, ஏன் நம்பக்கூடாது என்றார். அப்படியென்றால், கடந்த 15 ஆண்டுகளில் இருந்த அணியில் இதுதான் சிறந்த அணி என்கிறீர்களா? என செய்தியாளர் மீண்டும் கேட்க, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என கோலி பதில் கேள்வி எழுப்பினார். அதற்கு, நான் அப்படி நினைக்கவில்லை என செய்தியாளர் பதிலளிக்க, கோபமாக அது உங்களது கருத்து என கோலி தெரிவித்தார்.

Is the best Indian side in the last 15 years? pic.twitter.com/0Yj3kHk7Yy

— cricketnext (@cricketnext)

கேள்வி கேட்ட செய்தியாளரிடம் கோலியின் அணுகுமுறை ரசிக்கும்படியாக இல்லை. 
 

click me!