மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத் கூடுதலான தனது உடல் எடையை குறைப்பதற்கு முடி வெட்டுதல் முதல் ரத்தத்தை வெளியேற்றியும் எந்த பலனும் இல்லாமல் போய்விட்டது என்று தகவல் வெளியாகியிருக்கிறது.
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் தொடரில் மல்யுத்த இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற வினேஷ் போகத் கூடுதல் உடல் எடை காரணமாக இறுதிப் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து நாடு முழுவதிலுமிருந்து போகத்திற்கு ஆதரவு குவிந்து வருகிறது. எப்படியும் இறுதிப் போட்டியில் விளையாடி இந்தியாவிற்கு பதக்கம் வென்று கொடுக்க வேண்டும் என்பதற்காக கூடுதலான தனது உடல் எடையை குறைக்க கடுமையான பயிற்சியை மேற்கொண்டிருக்கிறார்.
உடல் எடையை குறைக்க தீவிர பயிற்சி – நீர்ச்சத்து குறைபாடு காரணமாக வினேஷ் போகத் மருத்துவமனையில் அனுமதி!
undefined
அதையும் தாண்டி முடி வெட்டுதல் மற்றும் ரத்தத்தை வெளியேற்றுதல் என்று பல வழிகளில் எல்லாம் முயற்சி செய்து பார்த்துள்ளார்கள். உடல் எடையை குறைக்க வினேஷ் போகத், அவரது பயிற்சியாளர் மற்றும் ஆதரவு ஊழியர்கள் என்று அனைவரும் இரவு முழுவதும் தூங்காமல் கண் விழித்து பயிற்சி செய்த நிலையில் கடைசியில் 1.85 கிலோ மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது. கடுமையான உடற்பயிற்சியின் காரணமாக அவருக்கு நீர்ச்சத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வினேஷ் போகத் எடையை குறைக்க முடியை வெட்டுவது, ரத்ததை வெளியேற்றுவது வரை கூட முயற்சிகள் செய்துள்ளார். எதுவும் பலனளிக்காமல் போயுள்ளது
💔💔💔 pic.twitter.com/jAGqkwufnV