80ஆவது கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை கைப்பற்றி தமிழக வீரர் சாதனை!

Published : Feb 21, 2023, 05:25 PM IST
80ஆவது கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை கைப்பற்றி தமிழக வீரர் சாதனை!

சுருக்கம்

ஜெர்மனியில் நடந்த செஸ் போட்டியில் தமிழக வீரர் விக்னேஷ் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.  

ஜெர்மனியில் 24ஆவது நார்ட் வெஸ்ட் 2023 செஸ் தொடர் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த விக்னேஷ், ஜெர்மனியின் லிஜா ஸ்னெடைருடன் மோதினர். இந்தப் போட்டி தொடங்கியது முதல் விக்னேஷ் சிவன் ஆதிக்கம் செலுத்தி வந்தார். இதையடுத்து, அவர் லிஜா ஸ்னெடைரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

திருப்பதியில் குடும்பத்தோடு சாமி தரிசனம் செய்த சூர்யகுமார் யாதவ்!

இந்த வெற்றியின் மூலமாக விக்னேஷ் 2500 புள்ளிகளை கடந்தார். இதன் மூலம் அவர் 80ஆவது இந்தியாவின் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார். தேசிய அளவில் ரயில்வே துறை சார்பில் நடந்த போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  இதற்கு முன்னதாக விக்னேஷின் சகோதரர் வைசாக் கடந்த 2019 ஆம் ஆண்டு கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை கைப்பற்றிய 59ஆவது வீரர் என்ற சாதனையை படைத்தார். இந்தியாவில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை கைப்பற்றிய சகோதரர்கள் விசாக் மற்றும் விக்னேஷ் இருவரும் மட்டுமே ஆகும். 

தோனி முதல் பாண்டியா வரை எல்லா கேப்டனாலும் ஓரங்கட்டப்பட்ட சஞ்சு சாம்சன்!

சகோதரரின் வெற்றி குறித்து விசாக் கூறியிருப்பதாவது: சகோதரர் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை கைப்பற்றியது மிகவும் அருமையானது. எங்களது திறமைகளை வளர்த்துக் கொண்டு உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்துவோம். சகோதரர்கள் இருவரும் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை கைப்பற்றியவர்களில் 28 பேர் தமிழகத்தைச் சேர்த்தவர்கள்.

மெஹந்தி, சங்கீத், மஞ்சள் பூசி விளையாடும் நிகழ்ச்சியில் கலக்கிய ஹர்திக் பாண்டியா - நடாசா ஸ்டான்கோவிச்!

 

 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

சேப்பாக்கம் டூ சின்னசாமி.. தென்னிந்தியாவை மறந்ததா பிசிசிஐ?.. ரசிகர்கள் எழுப்பும் முழக்கம்!
இஷான் கிஷன் ருத்ரதாண்டவம்.. மின்னல் வேக சதம்.. முதல் SMAT பட்டத்தை வென்று ஜார்க்கண்ட் சாதனை..!