
வியட்நாம் ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
வியட்நாம் ஓபன் டென்னிஸ் வியட்நாமில் நடைபெற்று வருகிறது, இந்தப் போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி தனது 2-வது சுற்றில் சீன தைபேவின் டி சென்னை எதிர்கொண்டார்.
இதில், 6-3, 6-1 என்ற நேர் செட்களில் டி சென்னை வீழ்த்தினார் யூகி பாம்ப்ரி. இதன்மூலம் காலிறுதியில் கால்பதித்தார் யூகி பாம்ப்ரி.
டி சென்னுக்கு எதிராக தொடர்ச்சியாக 4-வது வெற்றியைப் பெற்றுள்ளார் யூகி பாம்ப்ரி.
வெற்றிக் குறித்து யூகி பாம்ப்ரி பேசியது:
'எனது ஆட்டம் மகிழ்ச்சியளிக்கிறது. எனது சர்வீஸும், தாக்குதல் ஆட்டமும் சிறப்பாக அமைந்தது. ஒவ்வொரு ஆட்டத்தின் மூலமும் என்னை மேம்படுத்திக் கொள்ள முடியும் என நம்புகிறேன்' என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.