
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணியை ரன் குவிக்க விடாமல் தொடக்கம் முதலே இந்தியா கட்டுப்படுத்தியது.
தொடக்கம் முதலே இந்திய பவுலர்கள் ஆதிக்கம் செலுத்தினர். புவனேஷ்குமார், பும்ரா ஆகியோரின் வேகத்தில் நியூசிலாந்து அணி மளமளவென டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை இழந்தது.
கடந்த ஆட்டத்தில் டெய்லர் மற்றும் லதாம் ஜோடியை பிரிக்க முடியாமல் திணறிய இந்த முறை யாரையும் ஜோடி சேர்ந்து ஆதிக்கம் செலுத்தவிடவில்லை.
சுழற்பந்து வீச்சாளர் சாஹல், ஒரே ஓவரின் அடுத்தடுத்த பந்துகளில் கிராண்ட் ஹோமையும் மில்னேவையும் வெளியேற்றினார். ஆனால் ஹாட்ரிக் வாய்ப்பை இழந்தார்.
பந்துவீச்சில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்திய போதிலும் நியூசிலாந்தை ஆல் அவுட் செய்ய முடியவில்லை.
பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்திய பேட்டிங்கிலும் நியூசிலாந்தை மிரட்டி அடித்து நொறுக்குமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.