
இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு 231 ரன்களை நியூசிலாந்து இலக்காக நிர்ணயித்துள்ளது.
புனேவில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த நியூசிலாந்து அணி, தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து திணறியது.
தொடக்க வீரர்களான கப்டில், முன்ரோ ஆகியோர் முறையே 11 மற்றும் 10 ரன்களில் வெளியேறினர். கேப்டன் கேன் வில்லியம்சன் 3 ரன்களில் வெளியேறினர். போன ஆட்டத்தில் ஜொலித்த ரோஸ் டெய்லர், லதாம் ஆகியோரை இந்தமுறை களத்தில் நிலைக்க விடாமல் இந்திய பவுலர்கள் வெளியேற்றினர்.
அதிகபட்சமாக நிகோலிஸ் 42 ரன்களும் கிராண்ட் ஹோம் 41 ரன்களும் எடுத்தனர்.
50 ஓவரின் முடிவில் நியூசிலாந்து அணி, 9 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் சேர்த்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தாலும் இந்திய அணியால் நியூசிலாந்தை ஆல் அவுட் செய்ய முடியவில்லை.
இந்திய அணி சார்பில் புவனேஷ்குமார் 3 விக்கெட்டுகளும் பும்ரா மற்றும் சாஹல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஹர்திக் பாண்டியா மற்றும் அக்ஷர் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
இதையடுத்து 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி இன்னும் சற்று நேரத்தில் களமிறங்க உள்ளது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.