
புனேவில் நடந்துவரும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த நியூசிலாந்து அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.
தொடக்க ஆட்டக்காரர்களாக மார்டின் கப்டிலும் முன்ரோவும் களமிறங்கினர். கப்டில், 11 ரன்களில் புவனேஷ்குமார் பந்துவீச்சில் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன், பும்ராவின் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். இதைத்தொடர்ந்து முன்ரோவும் புவனேஷ்குமார் பந்துவீச்சில் கிளீன் போல்டு ஆகி பெவிலியன் திரும்பினார்.
கடந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி அந்த அணியின் வெற்றிக்கு வித்திட்ட ரோஸ் டெய்லர் மற்றும் லதாம் ஜோடி இன்றும் சற்று நிதானமாக ஆடியது. ஆனால் இந்தமுறை அவர்களை பார்ட்னர்ஷிப் அமைக்க விடாத ஹர்திக் பாண்டியா, ரோஸ் டெய்லரை வெளியேற்றினார். நிதானமாக விளையாடிய லதாம், அக்ஷர் படேலில் சுழலில் சிக்கி பெவிலியன் திரும்பினார்.
இதையடுத்து நிதானமாகவும் அதே நேரத்தில் ரன் குவிப்பிலும் ஈடுபட்டது நிகோலிஸ்-கிராண்ட் ஹோம் ஜோடி. களத்தில் நிலைத்துவிட்ட நிகோலிஸை புவனேஷ்குமார் போல்ட் ஆக்கினார்.
சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து 40 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் மட்டுமே எடுத்து விளையாடி வருகிறது.
கிராண்ட் ஹோம் 37 ரன்களுடனும் சண்டனெர் 2 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.