தமிழகத்தின் தோல்வி தவிர்க்க முடியாததா?

Asianet News Tamil  
Published : Oct 09, 2016, 03:18 AM ISTUpdated : Sep 19, 2018, 01:41 AM IST
தமிழகத்தின் தோல்வி தவிர்க்க முடியாததா?

சுருக்கம்

மும்பைக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் தமிழகம் தனது 2-ஆவது இன்னிங்ஸில் 54 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்துள்ளது. 64 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளதால் இந்தப் போட்டியில் தமிழக அணியின் தோல்வி ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

ரோதக்கில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த தமிழக அணி தனது முதல் இன்னிங்ஸில் 45.3 ஓவர்களில் 87 ரன்களுக்கு சுருண்டது. தமிழக அணியில் அதிகபட்சமாக இந்திரஜித் ஆட்டமிழக்காமல் 28 ரன்கள் எடுத்தார். 8 பேர் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். மும்பை தரப்பில் குல்கர்னி, தேஷ்பாண்டே ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

இதையடுத்து முதல் இன்னிங்ûஸ ஆடிய மும்பை அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 32 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்திருந்தது. 2-ஆவது நாளான சனிக்கிழமை தொடர்ந்து ஆடிய மும்பை அணி 67 ஓவர்களில் 176 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஆதித்ய தாரே 48, பவார் 35 ரன்கள் எடுத்தனர்.

தமிழகம் தரப்பில் விக்னேஷ் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அஸ்வின் கிறிஸ்து 3 விக்கெட் எடுத்தார். இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 89 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ûஸ ஆடிய தமிழக அணியில் வாஷிங்டன் சுந்தர்-கேப்டன் அபிநவ் முகுந்த் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 34.3 ஓவர்களில் 107 ரன்கள் குவித்தது. சுந்தர் 40, முகுந்த் 56 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

இதன்பிறகு தமிழக அணியின் சரிவு தவிர்க்க முடியாததானது. தினேஷ் கார்த்திக் 11, இந்திரஜித் 6, விக்னேஷ் 0, காந்தி 7 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் தமிழக அணி 54 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்துள்ளது. அபராஜித் 15, கெüஷிக் 1 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

IND vs WI 1st ODI: கோலி, கில் அதிரடி சதம்... வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
Virat Kohli: 15,000 ரன்களை தொட்ட ‘கிங்’ கோலி.. மிரட்டல் சாதனை படைத்த ரன் மெஷின்..!