பாரிஸ் 2024 ஒலிம்பிற்காக பேக் பே இந்தியா என்ற ஆடை தயாரிக்கும் நிறுவனம் கிட்டத்தட்ட 10 லட்சத்திற்கும் அதிகமான ஆடைகளை ஏற்றுமதி செய்துள்ளது.
பாரிஸ் 2024 ஒலிம்பிக் இன்னும் 2 நாட்களில் தொடங்க இருக்கிறது. இந்த ஒலிம்பிக் தொடரில் இந்தியா சார்பில் 16 விளையாட்டுகளில் 70 வீரர்கள், 47 வீராங்கனைகள் உள்பட மொத்தமாக 117 விளையாட்டு வீரர்கள் இடம் பெற்று 69 போட்டிகளில் 95 பதக்கங்களுக்காக போட்டி போடுகின்றனர். அதில், 13 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பாரிஸ் ஒலிம்பிக் தொடருக்காக சுமார் 80 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
நேபாள் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி – கம்பீர தோரணையோடு அரையிறுதிக்கு சென்ற இந்தியா மகளிர் அணி!
undefined
இந்த நிலையில் தான் இந்த தொடரை பார்த்து ரசிக்கும் ரசிகர்கள் ஒலிம்பிக் ஆடைகளை வாங்க வேண்டும் என்றால், ஒலிம்பிக் கடைகளில் விற்பனை செய்யப்படும் பிரத்யேகமான ஆடைகளைத் தான் வாங்க வேண்டும். அப்படி அவர்கள் வாங்கு ஆடைகள் திருப்பூரில் தயாரிக்கப்பட்ட ஆடைகள். இந்த தொடருக்காக திருப்பூரிலிருந்து கிட்டத்தட்ட 10 லட்சத்திற்கும் அதிகமான ஆடைகள் பாரிஸிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பூரில் தீபா ஜெயன் மற்றும் அவரது மகள் ஐஸ்வர்யா சொந்தமான ஜவுளி நிறுவனம் 10 லட்சத்திற்கும் அதிகமான ஆடைகளை ஏற்றுமதி செய்துள்ளது. கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் பேக் பே இந்தியா என்ற பெயரில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆடை நிறுவனம் மூலமாக விளையாட்டு தொடர்களில் கலந்து கொள்ளும் ரசிகர்களுக்கு ஆடைகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு ஏன், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரான்ஸில் நடந்த ரக்பி உலகக் கோப்பை தொடரிலும் இந்நிறுவத்தின் ஆடைகள் முக்கிய பங்கு வகித்தன. இந்த நிலையில் தான் பாரிஸ் ஒலிம்பிற்காக உலகம் முழுவதிலுமிருந்து 50க்கும் அதிகமான நிறுவனங்கள் தங்களது ஆடைகளை ஏற்றுமதி செய்திருக்கிறார்கள்.
அதில் இந்த Back Bay India நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனம் கிட்டத்தட்ட 10 லட்சத்திற்கும் அதிகமான ஆடைகளை ஏற்றுமதி செய்திருக்கிறது. அப்படி ஏற்றுமதி செய்யப்படும் ஆடைகள் ஒலிம்பிக் கமிட்டி மூலமாக விற்பனை செய்யப்படுகிறது. பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் எந்த ரசிகராவது தனது ஆடையில் மேட் இன் இந்தியா என்று அச்சிடப்பட்டிருக்கும் ஆடையை அணிருந்திருந்தால் அது பேக் பே இந்தியா நிறுவனம் தயாரித்த ஆடை என்று தெரிந்து கொள்ளலாம்.