
அர்ஜுனா விருதுக்கு இந்திய டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணாவின் பெயரை அகில இந்திய டென்னிஸ் சங்கம் (ஏஐடிஏ) பரிந்துரைத்துள்ளது.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவில் போபண்ணா சாம்பியன் வாகைச் சூடியதைத் தொடர்ந்து அவருடைய பெயரை அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைத்துள்ளது ஏஐடிஏ.
இது தொடர்பாக ஏஐடிஏவின் பொதுச் செயலர் ஹிரோன்மாய் சாட்டர்ஜி கூறியது:
"ரோஹன் போபண்ணாவின் பெயரை அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைத்திருக்கிறோம். இதற்கு முன்னரும் பலமுறை போபண்ணாவின் பெயரை அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைத்துள்ளோம். ஆனால் அப்போது அவருக்கு விருது கிடைக்கவில்லை.
இப்போது அவர் அர்ஜுனா விருதுக்கு தகுதியானவர். இந்த முறை அவருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட வேண்டும்.
இந்திய டென்னிஸ் வீராங்கனை ருஷ்மி சக்ரவர்த்தியின் பெயரையும் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைத்துள்ளோம்' என்று தெரிவித்தார்.
பிரெஞ்சு ஓபன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற 4-ஆவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் போபண்ணா என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.