
பிரெஞ்சு ஓபனில் மகளிர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் உலகின் 4-ஆம் நிலை வீராங்கனையான சைமோனா ஹேலப்பும், 47-ஆம் நிலை வீராங்கனையான ஜெலீனா ஆஸ்டாபெங்கோவும் இன்று மோதுகின்றனர்.
பிரெஞ்சு ஓபனின் அரையிறுதியில் ருமேனியாவின் சைமோனா, செக்.குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவுடன் மோதியதில் 6-4, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்றார்.
மற்றொரு அரையிறுதியில் லத்வியாவின் ஜெலீனா, ஸ்விட்சர்லாந்தின் டிமியா பேசின்ஸ்கையுடன் மோதியதில் 7-6 (4), 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்றார்.
பிரெஞ்சு ஓபனில் 2-ஆவது முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருக்கும் சைமோனா, ஜெலீனாவை வீழ்த்தும் பட்சத்தில் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றுவார். அதோடு தரவரிசையிலும் முதலிடத்தைப் பிடிப்பார்.
அதேநேரத்தில் ஜெலீனா, வெல்லும்பட்சத்தில் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பட்டம் வென்ற முதல் லத்வியர் என்ற பெருமையைப் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.