பிரெஞ்சு ஓபன்: இறுதிச் சுற்றிக்கு முன்னேறிய முதல் லத்வியர் ஜெலீனா ஆஸ்டாபெங்கோ…

Asianet News Tamil  
Published : Jun 09, 2017, 09:50 AM ISTUpdated : Sep 19, 2018, 12:43 AM IST
பிரெஞ்சு ஓபன்: இறுதிச் சுற்றிக்கு முன்னேறிய முதல் லத்வியர் ஜெலீனா ஆஸ்டாபெங்கோ…

சுருக்கம்

French Open First Latvia Jelena Osabenko

பிரெஞ்சு ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜெலீனா ஆஸ்டாபெங்கோ இறுதிச் சுற்றுக்கு முன்னேறியதன்மூலம் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் லத்வியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

பிரெஞ்சு ஓபன் போட்டியில்ன் நேற்று நடைபெற்ற அரையிறுதியில் லத்வியாவின் ஜெலீனா ஸ்விட்சர்லாந்தின் டிமியா பேசின்ஸ்கையுடன் மோதினார்.

அதில், 7-6 (4), 3-6, 6-3 என்ற செட் கணக்கில் டிமியா பேசின்ஸ்கையை தோற்கடித்தார் ஜெலீனா.

இதன்மூலம் 1983-க்குப் பிறகு பிரெஞ்சு ஓபனில் போட்டித் தரவரிசையில் இல்லாத நிலையில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஜெலீனா.

இதுதவிர கடந்த எட்டு ஆண்டுகளில் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய இளம் வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார் 20 வயதான ஜெலீனா.

வெற்றி குறித்து ஜெலீனா பேசியது: "நான் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறேன். இங்கு விளையாடுவதை விரும்புகிறேன். இங்கிருக்கும் ரசிகர்கள் அனைவரையும் நேசிக்கிறேன். இந்த வெற்றி எனக்குப் பிறந்த நாள் பரிசாக அமைந்துள்ளது' என்றார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

MS Dhoni: தோனி எப்போது வருவார்? சிஎஸ்கே கொடுத்த 'சூப்பர்' அப்டேட்.. ரசிகர்கள் ஹேப்பி!
CSK Replacement: ஆயுஷ் மத்ரேக்கு பதில் யார்? CSK-வின் நம்பர் 3 இடத்துக்கு 3 மாஸ் வீரர்கள்!