பிரெஞ்சு ஓபன் வாகைச் சூடியது இந்திய ஜோடி; வராலாற்றுச் சாதனை படைத்தார் போபண்ணா….

Asianet News Tamil  
Published : Jun 09, 2017, 09:37 AM ISTUpdated : Sep 19, 2018, 12:43 AM IST
பிரெஞ்சு ஓபன் வாகைச் சூடியது இந்திய ஜோடி; வராலாற்றுச் சாதனை படைத்தார் போபண்ணா….

சுருக்கம்

Indian pair wins French Open Pappanna ...

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா - கனடாவின் கேப்ரில்லா டப்ரோவ்ஸ்கி இணை வாகைச் சூடி அசத்தியதன்மூலம் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றி வரலாற்று சாதனைப் படைத்தார் போபண்ணா.

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியின் நேற்றைய நடைபெற்ற இறுதிச் சுற்றில் போட்டித் தரவரிசையில் 7-ஆவது இடத்தில் இருந்த போபண்ணா - கேப்ரில்லா ஜோடி ஜெர்மனியின் அன்ன லீனா - கொலம்பியாவின் ராபர்ட் ஃபாரா ஜோடியை எதிர்கொண்டது.

இதில், 2-6, 6-2, 12-10 என்ற செட் கணக்கில் அன்ன லீனா - கொலம்பியாவின் ராபர்ட் ஃபாரா ஜோடியைத் தோற்கடித்து இந்தியா ஜோடி போபண்ணா - கேப்ரில்லா ஜோடி வென்றது.

இதன்மூலம் லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி, சானியா மிர்ஸா ஆகியோர் மூவரைத் தொடர்ந்து கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பட்டம் வென்ற 4-ஆவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் போபண்ணா.

வெற்றி குறித்துப் பேசிய போபண்ணா, "முதல் செட்டை இழந்த பிறகு அடுத்த செட்டில் எங்களால் இயன்ற அளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் தீவிரம் காட்டினோம்.

நாங்கள் ஒருவருக்கொருவர் உற்சாகப்படுத்திக் கொண்டோம். அதுதான் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

ஒரு கட்டத்தில் பதற்றம் தனிந்த பிறகு நாங்கள் அசத்தலாக ஆடினோம்' என்றார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

MS Dhoni: தோனி எப்போது வருவார்? சிஎஸ்கே கொடுத்த 'சூப்பர்' அப்டேட்.. ரசிகர்கள் ஹேப்பி!
CSK Replacement: ஆயுஷ் மத்ரேக்கு பதில் யார்? CSK-வின் நம்பர் 3 இடத்துக்கு 3 மாஸ் வீரர்கள்!