
முதல் ஒருநாள் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை 63 ஓட்டங்கள் வித்தியாத்தில் தோற்கடித்து ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக வெற்றிப் பெற்று கர்சித்தது.
மேற்கிந்தியத் தீவுகள் - ஆப்கானிஸ்தான் அணிகள் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் போட்டியிடுகின்றன.
செயிண்ட் லுசியாவில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 212 ஓட்டங்கள் எடுத்தது ஆப்கானிஸ்தான்.
அந்த அணியின் தொடக்க வீரர் ஜாவத் அஹ்மதி அதிகபட்சமாக 81 ஓட்டங்கள் எடுத்தார்.
இதனையடுத்து களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 44.4 ஓவர்களில் 149 ஒட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியடைந்தது.
18 வயது லெக் ஸ்பின்னர் ரஷித் கான் பிரமாதமாகப் பந்துவீசி ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆப்கானிஸ்தானின் வெற்றிக்கு வித்திட்டார். ஒருநாள் கிரிக்கெட்டில் இது அவரது நான்காவது சிறப்பு பந்துவீச்சாகும்.
ஜிம்பாப்வே, வங்கதேச அணிகளை மட்டுமே வெற்றி கண்ட ஆப்கானிஸ்தான் அணி, முதல் முறையாக பெரிய அணியான மேற்கிந்தியத் தீவுகள் அணியை தும்சம் செய்து ஒருநாள் போட்டியில் வெற்றி கண்டுள்ளது.
இந்த ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் முன்னிலை வகிக்கிறது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.