
சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி கோப்பை போட்டியில் சர்தார் சிங் தலைமையில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.
மலேசியாவின் இபோ நகரில் மார்ச் 3-ஆம் தேதி தொடங்குகிறது சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி கோப்பை போட்டி.
இந்தப் போட்டியில், உலகின் 6-ஆம் நிலை அணியான இந்தியாவுடன், உலகின் முதல்நிலையில் இருக்கும் ஆஸ்திரேலியா, 2-ஆவது இடத்தில் இருக்கும் ஆர்ஜென்டீனா அணிகளும், அவற்றோடு இங்கிலாந்து, அயர்லாந்து, போட்டியை நடத்தும் மலேசியா ஆகிய அணிகளும் பங்கேற்கின்றன. இப்போட்டியின் இறுதி ஆட்டம் மார்ச் 10-ஆம் தேதி நடைபெறுகிறது.
சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி கோப்பை போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கு சர்தார் சிங்கிற்கு கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரமன்தீப் சிங் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த அணியில், மன்தீப் மோர், சுமித் குமார், ஷிலானந்த் லக்ரா ஆகியோர் முதல் முறையாக களம் காண்கின்றனர்.
ஜூனியர் வீரர்களான இவர்கள் மூவரும், கடந்த ஆண்டு சுல்தான் ஜோஹர் கோப்பை ஹாக்கியில் வெண்கலம் வென்ற அணியில் இடம்பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அணியின் பயிற்சியாளர் ஜோர்டு மாரிஜ்னே. "மன்பிரீத் சிங் இல்லாத நிலையில், அனுபவம் வாய்ந்த சர்தார் சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக 2 போட்டிகளில் வாய்ப்பை இழந்த சர்தார் தனது திறமையை நிரூபிக்க இது சரியான வாய்ப்பாகும்.
நியூஸிலாந்து தொடரில் 4 வீரர்கள் முதல் முறையாக களமிறக்கப்பட்டதைப் போல, சர்வதேச அனுபவத்தைப் பெற 3 வீரர்கள் இந்தப் போட்டியில் களம் காண்கின்றனர்' என்றார்.
இந்திய அணி விவரம்:
சூரஜ் கர்கெரா, கிருஷன் பாதக் (கோல் கீப்பர்கள்). அமித் ரோஹிதாஸ், டிப்சன் திர்கி, வருன் குமார், சுரேந்தர் குமார், நீலம் சஞ்ஜீப், மன்தீப் மோர் (தடுப்பாட்டக்காரர்கள்). சர்தார் சிங், சுமித், நீலகண்ட சர்மா, சிம்ரன்ஜித் சிங் (நடுகள வீரர்கள்). குர்ஜந்த் சிங், ரமன்தீப் சிங், தல்வீந்தர் சிங், சுமித் குமார், ஷிலானந்த் லக்ரா (முன்களவீரர்கள்).
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.