காமன்வெல்த் போட்டியில் குரூப்-ஏ பிரிவில் இந்தியா; சிந்து, சாய்னா, ஸ்ரீகாந்த் பங்கேற்பு...

Asianet News Tamil  
Published : Feb 21, 2018, 11:11 AM ISTUpdated : Sep 19, 2018, 01:59 AM IST
காமன்வெல்த் போட்டியில் குரூப்-ஏ பிரிவில் இந்தியா; சிந்து, சாய்னா, ஸ்ரீகாந்த் பங்கேற்பு...

சுருக்கம்

India in Group-A category Commonwealth Games Sindhu Saina Srikanth Participation ...

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பாட்மிண்டனில் குரூப்-ஏ பிரிவில் தேர்வாகி உள்ள இந்திய அணியில் பி.வி.சிந்து, சாய்னா நெவால், ஸ்ரீகாந்த் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் ஏப்ரல் 4-ஆம் தேதி தொடங்கி, 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதில் பாட்மிண்டன் போட்டியில் கலப்பு அணிகள் பிரிவு ஆட்டங்கள் ஏப்ரல் 5-ஆம் தேதி தொடங்குகிறது.

இதில் உலகின் 3-ஆம் நிலை வீரரான ஸ்ரீகாந்த், 11-ஆம் நிலை வீரரான ஹெச்.எஸ்.பிரணாய் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பங்கேற்கிறார். மகளிர் ஒற்றையர் பிரிவில் சிந்து, சாய்னா களமிறங்குகின்றனர்.

ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் - சிரக் ஷெட்டி இணை முதல் முறையாக காமன்வெல்த் போட்டியில் விளையாடுகிறது.

கலப்பு இரட்டையர் பிரிவில் பிரணவ் ஜெர்ரி சோப்ரா - சிக்கி ரெட்டி இணை பலப்பரீட்சை நடத்துகிறது.

மகளிர் இரட்டையரில் சிக்கி ரெட்டி - அஸ்வினி பொன்னப்பா களமிறங்குகின்றனர். இந்தப் போட்டியில் இந்திய அணி இடம் பெற்றுள்ள 'குரூப்-ஏ'வில் பாகிஸ்தான், இலங்கை, ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் உள்ளன.

கலப்பு அணிகள் பிரிவு முடிவுகள் ஏப்ரல் 9-ஆம் தேதி வெளியான பிறகு, அனைத்து வீரர், வீராங்கனைகளும் தங்களது பிரிவில் தனிநபர் போட்டிகளில் ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் கலந்து கொள்கின்றனர். அவற்றின் இறுதி ஆட்டங்கள் 14 மற்றும் 15-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ப்பா.. என்னா அடி.. சர்ஃபராஸ் கானை சிஎஸ்கே பிளேயிங் லெவனில் சேர்க்கணும்.. ஜாம்பவான் சப்போர்ட்!
டி20 உலகக் கோப்பையில் பெரிய அணிகளை பந்தாட ஆப்கானிஸ்தான் ரெடி.. ஸ்டிராங் டீம்.. அட! கேப்டன் இவரா?