நாளை முதல் அமலுக்கு வருகின்றன ஐசிசியின் புதிய விதிகள்; அப்படி என்ன விதிமுறைகள்?

 
Published : Sep 27, 2017, 10:11 AM ISTUpdated : Sep 19, 2018, 01:13 AM IST
நாளை முதல் அமலுக்கு வருகின்றன ஐசிசியின் புதிய விதிகள்; அப்படி என்ன விதிமுறைகள்?

சுருக்கம்

The new rules of the ICC come into effect tomorrow

ஐசிசி-யின் (சர்வதேச கிரிக்கெட் குழு) புதிய கிரிக்கெட் விதிமுறைகள் நாளை முதல் அமலுக்கு வருகின்றன. 

விதி 1:

புதிய விதிமுறைப்படி நடுவருடனோ அல்லது களத்தில் மற்றவர்களுடனோ மோசமான மோதலில் ஈடுபடும்போது, சம்பந்தப்பட்ட வீரரை நடுவர் வெளியேற்ற முடியும். வெளியேற்றப்படும் வீரர், அந்த ஆட்டத்தின் எஞ்சிய பகுதிகளில் விளையாட முடியாது.

விதி 2:

கிரிக்கெட் மட்டையின் அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பேட் நுனிப்பகுதியின் தடிமன் 40 மி.மீ. அளவுக்கு மிகாமலும், ஒட்டு மொத்த பேட்டின் தடிமன் 67 மி.மீ. அளவுக்கு உட்பட்டும் இருக்க வேண்டும். வீரர்கள் பயன்படுத்தும் பேட்டின் அளவில் ஏதாவது சந்தேகம் இருப்பின் அதை நடுவர் சோதனைக்கு உட்படுத்தலாம்.

விதி 3:

டெஸ்ட் போட்டியில் 80 ஓவர்களுக்குப் பிறகு கூடுதலாக டிஆர்எஸ் வாய்ப்பு வழங்கப்படாது. ஓர் இன்னிங்ஸிற்கு இரு டிஆர்எஸ் வாய்ப்புகள் மட்டுமே வழங்கப்படும்.

விதி 3:

டி20 போட்டியிலும் இனி டிஆர்எஸ் பயன்படுத்தப்படும். 

விதி 4:

ரன் அவுட் விதிமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுவரையில் பந்து ஸ்டெம்பில் படுகிறபோது பேட்ஸ்மேனின் பேட் கிரீஸுக்குள் இருக்கும் தரைப் பகுதியை தொட்டவாறு இருக்க வேண்டும். ஆனால், புதிய விதிமுறைப்படி ஒரு பேட்ஸ்மேன் தனது பேட்டால் கிரீஸை தொட்டுவிட்டால், அதன்பிறகு பந்து ஸ்டெம்பில் படுகிறபோது அவருடைய பேட் கிரீஸுக்கு உட்பட்ட தரைப் பகுதியில் தொடாமல் மேல் நோக்கி இருந்தால் அவுட் கிடையாது. 

விதி 5:

பௌண்டரி எல்லையில் கேட்ச் பிடிக்கும்போது பீல்டர்களின் கால் பௌண்டரி எல்லைக்குள் இருக்க வேண்டும். மாறாக அவர்கள் பௌண்டரி எல்லையைத் தாண்டி பந்தைப் பிடித்தால், அது பௌண்டரியாக கணக்கில் கொள்ளப்படும்.

விதி 6:

விக்கெட் கீப்பர், பீல்டர் ஆகியோரின் ஹெல்மெட்டில் பந்து பட்டு கேட்ச் ஆனால், சம்பந்தப்பட்ட பேட்ஸ்மேன் ஔட்டானதாக கருதப்படும்.

ஐசிசி-யின் இந்த புதிய விதிமுறைகள் நாளை தொடங்கும் தென் ஆப்பிரிக்கா - வங்கதேசம், பாகிஸ்தான் - இலங்கை இடையேயான டெஸ்ட் தொடர்களில் இருந்து பின்பற்றப்பட உள்ளன.

தற்போது நடைபெற்று வரும் இந்தியா - ஆஸ்திரேலியா தொடரில் பழைய விதிமுறைகளே பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ஹர்திக் மரண அடி.. பும்ரா மேஜிக் பவுலிங்.. SA-வை கதறவிட்ட இந்தியா.. T20 தொடரை வென்று அசத்தல்!
அபிஷேக் சர்மா சாதனையை சல்லி சல்லியாக நொறுக்கிய ஹர்திக் பாண்ட்யா..! மின்னல் வேக அரை சதம்!