இனிப்பு தடவி பந்தை சேதப்படுத்தியதாக இலங்கை கேப்டன் மீது பகிரங்க குற்றச்சாட்டு .

First Published Jun 18, 2018, 3:28 PM IST
Highlights
The indictment of the Sri Lankan Captain that the sweet rubber ball was damaged.


மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இனிப்பு தடவி பந்தை சேதப்படுத்தியதாக இலங்கை அணி கேப்டன் தினேஷ் சண்டிமால் மீது குற்றம் அதிரடியாக சாட்டப்பட்டு உள்ளது.

மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப் பயணம் செய்து வருகிறது இலங்கை கிரிக்கெட் அணி. செயின்ட்லூசியாவில் இரண்டாவது டெஸ்ட் நடந்து வருகிறது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை நடந்த ஆட்டத்தின்போது பந்தின் நிலையை மாற்ற முயன்றதாக நடுவர்கள் அலீம் தர், இயான் கெளட் ஆகியோர் புகார் கொடுத்தனர். அதாவது பந்தில் இனிப்பு தடவி சேதப்படுத்தினர்.

இதனால் சனிக்கிழமை 2 மணி நேரம் போட்டியில் கலந்து கொள்ளாமல் சண்டிமால் தலைமையில் இலங்கை அணியினர் ஆடை மாற்றும் அறையிலேயே போராட்டம் நடத்தினர்.

இருப்பினும், ஐசிசி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தது. அதன்பின்னரே இலங்கை வீரர்கள் மீண்டும் ஆட சென்றனர். மேலும், ஐசிசி நடத்தை விதிகள் 2.2.9. மீறியதாக சண்டிமால் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. 

இதனிடையே தனது வீரர்கள் எந்த முறைக்கேட்டிலும் ஈடுபடவில்லை என்று இலங்கை கிரிக்கெட் அமைப்பு அதிரடியாக தெரிவித்துள்ளது. 

tags
click me!