தாய்லாந்தில் 2023 ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: அதிகாரப்பூர்வ சின்னமாக ஹனுமன் அறிவிப்பு!

By Rsiva kumar  |  First Published Jul 11, 2023, 7:30 PM IST

தாய்லாந்தில் நடக்க உள்ள தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு ஹனுமன் லோகோவாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தாய்லாந்தில் நாளை 12 ஆம் தேதி 25ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடங்குகிறது. இதில், ஒவ்வொரு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டு தங்களது நாட்டிற்கு பெருமை சேர்க்க உள்ளனர். இந்திய புராணங்களில் மிகவும் மதிக்கப்படும் கடவுள்களில் ஒருவரான ஹனுமன், கான்டினென்டல் ஆளும் குழு நிறுவப்பட்ட 50 வது ஆண்டு விழாவில் நடைபெறும் நிகழ்வின் அதிகாரப்பூர்வ லோகோவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரீம் 11 ஜெர்சியுடன் டாப் பேட்ஸ்மேன்கள்: வைரலாகும் போட்டோஷூட் புகைப்படங்கள்!

Tap to resize

Latest Videos

வேகம், வலிமை, தைரியம் மற்றும் ஞானம் உள்ளிட்ட ராமரின் சேவையில் ஹனுமன் அசாதாரண திறன்களை வெளிப்படுத்துவதால், ஹனுமனின் மிகப்பெரிய திறன், உண்மையில், அவரது நம்பமுடியாத உறுதியான விசுவாசம் மற்றும் பக்தி என்று ஆசிய தடகள சங்கம் தனது இணையதளத்தில் விளக்கியுள்ளது.

லண்டனில் காஃபி கப்புடன் உலா வரும் அனுஷ்கா சர்மா; வீடியோ எடுக்கும் விராட் கோலி!

இந்த 25ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியானது விளையாட்டு வீர்ரகளது திறமைகள், டீம் ஒர்க், தடகளம், அர்ப்பணிப்பு மற்றும் விளையாட்டுத்திறன் ஆகியவற்றை பறைசாற்றுவதை வெளிப்படுத்துகிறது. ஷாட் புட்டர் தஜிந்தர்பால் சிங் டூர் மற்றும் நீளம் தாண்டுதல் வீரர் முரளி ஸ்ரீசங்கர் தலைமையிலான இந்தியா, சாம்பியன்ஷிப்பில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

WTC 2023-25: எல்லோ கோட்டையும் அழித்து, மறுபடியும் இந்தியா – ஆஸ்திரேலியாவா? இனிமேல் தான் தெரியும்!

தாய்லாந்தில் 5 நாட்கள் நடக்கும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியானது கடந்த சனிக்கிழமை இரவே டெல்லி மற்றும் பெங்களூருவிலிருந்து தாய்லாந்துக்கு புறப்பட்டுச் சென்றது. ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா, தாய்லாந்திற்குச் செல்லும் இந்தியக் குழுவிற்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

வர்ணனையாளராக அறிமுகமாகும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா!

இந்தியா சார்பில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள்:

வீரர்கள்:

ராஜேஷ் ரமேஷ் மற்றும் முகமது அஜ்மல் (400 மீ/4*400 மீட்டர் ரிலே/4*400 மீ மிக்ஸ்டு ரிலே), அமோஜ் ஜாகோப் (4*400 மீட்டர் ரிலே/4*400 மீ மிக்ஸ்டு ரிலே), நிஹால் ஜோல் வில்லியம், மிஜோ சாகோ குரியன் (4*400 மீ ரிலே), கிருஷ்ண குமார் மற்றும் முகமது அப்சால் (800 மீ), அஜய் குமார் சரோஜ் மற்றும் ஜின்சன் ஜான்சன் (1500 மீ), குல்வீர் சிங் (5000 மீட்டர்/10,000 மீட்டர்), அபிஷேல் பால் (5000 மீட்டர்/10000 மீட்டர்), முகமது நூர்ஹாசன் மற்றும் பால் கிஷான் (3000 மிட்டர் ஸ்டீப்லெசேஷ்), யாஷஸ் பாலக்‌ஷா மற்றும் சந்தோஷ் குமார் (400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம்), தேஜஸ்வின் ஷங்கர் (டெகலதான்), சர்வேஷ் அனில் குஷாரே (உயரம் தாண்டுதல்), ஜேஸ்வின் அல்ட்ரின் மற்றும் முரளி ஸ்ரீ சங்கர் (நீளம் தாண்டுதல்), அப்துல்லா அபூபக்கர் (மும்முறை தாண்டுதல்), தஜிண்டெர்பால் சிங் டூர் மற்றும் கரன்வீர் சிங் (ஷாட் புட்), டிபி மனு (ஈட்டி எறிதல்), அக்‌ஷ்தீப் சிங் மற்றும் விகாஷ் சிங் (20 கிமீ ரேஸ் வாக்)

5ஆவது பவுலராக யாருக்கு வாய்ப்பு? முகேஷ் குமார், நவ்தீப் சைனி, ஜெயதேவ் உனத்கட் கடும் போட்டி!

 

வீராங்கனைகள்:

ஜோதி யர்ராஜி (200 மீ/100 மீ தடை ஓட்டம்), நித்யா ராம்ராஜ் (100 மீ தடை ஓட்டம்), ஐஸ்வர்யா மிஸ்ரா (400 மீ/4x400 மீ தொடர் / 4x400 மீ கலப்பு தொடர் ஓட்டம்), சந்தா மற்றும் லவிகா சர்மா (800 மீ), லிலி தாஸ் (1500 மீ), அன்கிதா (1500 மீ), பருல் சவுத்ரி (5000மீ/3000மீ ஸ்டீப்பிள்சேஸ்), சஞ்சீவானி ஜாதவ் (10000மீ), ப்ரிதி (3000மீ ஸ்டீபிள்சேஸ்), பூஜா மற்றும் ரூபினா யாதவ் (உயரம் தாண்டுதல்), பரனிகா இளங்கோவன் (போல் வால்ட்), ஷைலி சிங் மற்றும் ஆன்சி சோஜன் (நீளம் தாண்டுதல்), அபதுவா மன்பிரீத் கவுர் (ஷாட் எறிதல்), அன்னு ராணி (ஈட்டி எறிதல்), ஸ்வப்னா பர்மன் (ஹெப்டத்லான்), பிரியங்கா மற்றும் பாவனா ஜாட் (20 கி.மீ ரேஸ் வாக்), ரெசோனா மல்லிக் ஹீனா மற்றும் ஜோதிகா ஸ்ரீ தண்டி (4x400 மீ ரிலே/4x400 மீ கலப்பு தொடர் ஓட்டம்), ஜிஸ்னா மேத்யூ மற்றும் சுபா வெங்கடேசன் (4×400)

click me!