அடுத்து காமன்வெல்த் போட்டிகளில் சாம்பியன் வெல்வதே இலக்கு - நடப்பு உலக சாம்பியனான சாய்கோம் மீராபாய்...

 
Published : Dec 09, 2017, 10:31 AM ISTUpdated : Sep 19, 2018, 01:33 AM IST
அடுத்து காமன்வெல்த் போட்டிகளில் சாம்பியன் வெல்வதே இலக்கு - நடப்பு உலக சாம்பியனான சாய்கோம் மீராபாய்...

சுருக்கம்

the goal of winning the championship in the next Commonwealth Games - current world champion Saigom Mirabai

காமன்வெல்த், ஆசிய விளையாட்டு, 2020 ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்வதே எனது இலக்கு" என்று பளுதூக்குதலில் நடப்பு உலக சாம்பியனான சாய்கோம் மீராபாய் சானு கூறினார்.

உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் அனஹெய்ம் நகரில் கடந்த மாதம் நடைபெற்றது.

இந்த உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் 194 கிலோ எடையை தூக்கி உலக சாதனையுடன் தங்கம் வென்றார் இந்தியாவின் சாய்கோம் மீராபாய் சானு. இதன்மூலம் உலக சாம்பியன்ஷிப்பில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா தங்கம் வென்றது.

இதில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி ஆவார். இந்த நிலையில், தனது வெற்றி குறித்து மீராபாய் கூறியது:

"ரியோ ஒலிம்பிக் தோல்விக்குப் பிறகு மிகவும் மனச்சோர்வடைந்தேன். அந்த ஏமாற்றத்தில் இருந்து மீண்டுவர நீண்ட காலம் ஆனது. பயிற்சியை நிறுத்திவிட்டு, பளுதூக்குதல் விளையாட்டை கைவிட நினைத்தேன்.

சமூக வலைதளங்களில் எனக்கும், எனது பயிற்சியாளருக்கும் எதிராக வெளியான விமர்சனங்கள் காயப்படுத்தின. அனைத்தையும் எவ்வாறு சரிசெய்வதென யோசித்தேன். தற்போது முயற்சிப்பதை விட மேலும் சிறப்பாக முயற்சிப்பதே விமர்சனங்களுக்கு பதில் சொல்லும் ஒரே வழி என உணர்ந்தேன்.

எனவே, பளுதூக்கும் நுட்பங்களில் மாற்றங்கள் கொண்டுவந்ததுடன், மனநல நிபுணரிடம் தொடர்ந்து ஆலோசனைகள் பெற்றேன். எனது இந்த மாற்றத்தில் மனநல மருத்துவருக்கும் பெரும் பங்கு உண்டு.

ஒவ்வாவொரு வாரமும் உலக மற்றும் தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்புகளால்  ஊக்கமருந்து சோதனைக்கு உள்படுத்தப்பட்டேன்.

ரியோ ஒலிம்பிக் தேர்வுப் போட்டியின்போது 192 கிலோ எடையை தூக்கினேன். ஒலிம்பிக்கிற்கு தேர்வாகியிருந்தார் நிச்சயம் வெள்ளிப் பதக்கம் வென்றிருப்பேன். ஆனால், எனது முதல் ஒலிம்பிக் போட்டி என்பதால் சற்று பதற்றமடைந்துவிட்டேன்.

உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வெல்வது எனது கனவாகும். தற்போது அதை எட்டிவிட்டேன். அடுத்ததாக, காமன்வெல்த், ஆசிய விளையாட்டு, 2020 ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்வதே எனது இலக்கு" என்று அவர் கூறினார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

விஜய் ஹசாரே டிராபியில் கோலி மிரட்டல் சதம்.. 16000 ரன்களை கடந்து புதிய சாதனை
'பும்ரா, ரிஷப் பண்ட் என்னிடம் மன்னிப்பு கேட்டனர்'.. உருவக் கேலி குறித்து மனம் திறந்த பவுமா..!