ஐசிசியின் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் கோலிக்கு இரண்டாவது இடம்...

 
Published : Dec 08, 2017, 10:32 AM ISTUpdated : Sep 19, 2018, 01:33 AM IST
ஐசிசியின் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் கோலிக்கு இரண்டாவது இடம்...

சுருக்கம்

Second place for Kohli in ICC Test rankings

ஐசிசியின் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலி 2-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக 6-வது இடத்தில் இருந்த கோலி, அந்தத் தொடரில் மொத்தமாக 610 ஓட்டங்கள் குவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியின்போது, ஒரு இன்னிங்ஸில் அவர் விளாசிய 243 ஓட்டங்கள் அவரது தனிப்பட்ட அதிகபட்சமாகும்.

இவை தவிர இரண்டு முறை இரட்டைச் சதம், மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஹாட்ரிக் சதமடித்த முதல் கேப்டன், ஆறு முறை இரட்டைச் சதமடித்த முதல் கேப்டன் போன்ற சாதனைகளையும் அவர் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவற்றின் காரணமாக தரவரிசையில் இந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளார் கோலி.

இதனால், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், இந்தியாவின் சேதேஷ்வர் புஜாரா, நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன், இங்கிலாந்தின் ஜோ ரூட் ஆகியோரை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 938 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். அவருக்கும், கோலிக்கும் (893) இடையே 45 புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் உள்ளன.

அதேபோன்று,பேட்ஸ்மேன்கள் தரவரிசையில், இதர இந்திய வீரர்களான முரளி விஜய் 3 இடங்கள் முன்னேறி 25-வது இடத்திலும், ரோஹித் சர்மா 6 இடங்கள் முன்னேறி 40-வது இடத்திலும் உள்ளனர். புஜாரா 2 இடங்கள் கீழிறங்கி 4-வது இடத்தில் உள்ளார்.

பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில், ஜடேஜா ஓரிடம் சறுக்கி 3-வது இடத்திலும், அஸ்வின் 4-வது இடத்திலும் உள்ளனர்.

ஆல்ரௌண்டர்கள் வரிசையில் ஜடேஜா 2-வது இடத்தில் தொடர, அஸ்வின் ஓரிடத்தை இழந்து 4-வது இடத்துக்கு வந்துள்ளார்.

டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் ஒரு புள்ளியை இழந்த இந்தியா முதலிடத்திலும், இலங்கை 6-வது இடத்திலும் தொடருகிறது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

விஜய் ஹசாரே டிராபியில் கோலி மிரட்டல் சதம்.. 16000 ரன்களை கடந்து புதிய சாதனை
'பும்ரா, ரிஷப் பண்ட் என்னிடம் மன்னிப்பு கேட்டனர்'.. உருவக் கேலி குறித்து மனம் திறந்த பவுமா..!