அரையிறுதி ஆட்டத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் அணிகள்…

 
Published : Dec 29, 2016, 11:31 AM ISTUpdated : Sep 19, 2018, 02:54 AM IST
அரையிறுதி ஆட்டத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் அணிகள்…

சுருக்கம்

சென்னையில் நடைபெற்று வரும் 65-ஆவது தேசிய சீனியர் வாலிபால் போட்டியின் ஆடவர் பிரிவில் தமிழகம், பஞ்சாப், கேரளம், இந்திய இரயில்வே ஆகிய அணிகள் காலிறுதியை வென்று அரையிறுதியை எதிர்நோக்கி காத்திருக்கின்றன.

சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் ஆடவர் பிரிவில் 25 அணிகளும், மகளிர் பிரிவில் 23 அணிகளும் பங்கேற்றுள்ளன.

இதில் புதன்கிழமை நடைபெற்ற ஆடவர் காலிறுதியில் தமிழக அணி 25-20, 25-20, 25-21 என்ற நேர் செட்களில் ராஜஸ்தான் அணியைத் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியது.

மற்ற ஆடவர் பிரிவு காலிறுதி ஆட்டங்களில் இந்திய ரயில்வே அணி
25-20, 25-20, 25-13 என்ற நேர் செட்களில் ஆந்திர அணியையும், பஞ்சாப் அணி 25-22, 25-18, 25-19 என்ற நேர் செட்களில் சர்வீசஸ் அணியையும், கேரள அணி 25-14, 25-11, 25-13 என்ற நேர் செட்களில் ஹிமாசலப் பிரதேச அணியையும் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறின.

மகளிர் பிரிவு காலிறுதியில் தமிழக அணி 19-25, 8-25, 11-25 என்ற நேர் செட்களில் மகாராஷ்டிர அணியிடம் தோற்று வெளியேறியது.

மற்ற காலிறுதி ஆட்டங்களில் இந்திய இரயில்வே அணி 25-13, 25-8, 25-17 என்ற நேர் செட்களில் உத்தரப் பிரதேச அணியையும், ஆந்திர அணி 25-23, 25-18, 25-6 என்ற நேர் செட்களில் தெலங்கானாவையும், கேரள அணி 25-10, 25-15, 25-17 என்ற நேர் செட்களில் மேற்கு வங்க அணியையும் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறின.

வியாழக்கிழமை நடைபெறும் மகளிர் பிரிவு முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய இரயில்வே - ஆந்திர அணிகளும், 2-ஆவது அரையிறுதியில் மகாராஷ்டிரம் - கேரளம் அணிகளும் மோதுகின்றன.

இந்த ஆட்டங்கள் முறையே பகல் 12 மணி மற்றும் பிற்பகல் 2 மணிக்கு நடைபெறுகின்றன.

ஆடவர் பிரிவு முதல் அரையிறுதியில் இந்திய இரயில்வே - பஞ்சாப் அணிகளும், 2-ஆவது அரையிறுதியில் தமிழகம் - கேரள அணிகளும் மோதுகின்றன.

இந்த ஆட்டங்கள் முறையே மாலை 4 மணி மற்றும் 6 மணிக்கு நடைபெறுகின்றன.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

உள்நாட்டு கிரிக்கெட்டின் கிங்..! இந்திய 'ஸ்டார்' ஆல்ரவுண்டர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!
WTC புள்ளிப்பட்டியலில் இந்திய அணி பரிதாபம்..! முதலிடம், இரண்டாம் இடம் எந்த அணி?