2-வது இடத்தில் சவீதி; 4-இடத்தில் விகாஸ்

First Published Dec 24, 2016, 12:18 PM IST
Highlights


சர்வதேச குத்துச்சண்டை சங்கம் (ஏஐபிஏ) வெளியிட்டுள்ள புதிய தரவரிசைப் பட்டியலில், இந்திய வீரர் சவீதி பூரா 2-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஆண்கள் பிரிவில் விகாஸ் கிருஷ்ணன் 4-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

சர்வதேச குத்துச்சண்டை சங்கம் (ஏஐபிஏ) வெளியிட்டுள்ள புதிய தரவரிசைப் பட்டியலில், மகளிருக்கான தரவரிசையில் இந்தியாவின் 81 கிலோ வீராங்கனை சவீதி பூரா 1,500 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்தில் உள்ளார்.

சர்ஜுபாலா தேவி லைட் ஃப்ளைவெயிட் (48 கிலோ) பிரிவில் 3-ஆவது இடத்தில் உள்ளார்.

57 கிலோ எடைப் பிரிவில் சோனியா லாதர் 3-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

மற்றொரு வீராங்கனையான நிகத் ஜரீன் 54 கிலோ எடைப் பிரிவில் 16-ஆவது இடத்தில் உள்ளார்.

ஆண்கள் தரவரிசையில், ஏஐபிஏ-வின் இந்த ஆண்டுக்கான சிறந்த குத்துச்சண்டை வீரர் பட்டம் வென்ற விகாஸ் கிருஷ்ணன் 75 கிலோ எடைப் பிரிவில் 1,350 புள்ளிகளுடன் 4-ஆவது இடத்தில் உள்ளார்.

ரியோ ஒலிம்பிக் போட்டியில் அவர் காலிறுதி வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

அவருக்கு அடுத்தபடியாக, 56 கிலோ பாந்தம்வெயிட் எடைப் பிரிவில் சிவ தாபா 950 புள்ளிகளுடன் 7-ஆவது இடத்தில் உள்ளார்.

உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்றவரான சிவ தாபா, சமீபத்தில் 60 கிலோ லைட்வெயிட் எடைப் பிரிவுக்கு மாறியது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு இந்திய வீரரான தேவேந்திர சிங் லைட் ஃப்ளைவெயிட் (49 கிலோ) பிரிவில் 27-ஆவது இடத்தில் உள்ளார்.

அவரும் சமீபத்தில் ஃப்ளைவெயிட் 52 கிலோ பிரிவுக்கு மாறியுள்ளார்.

முன்னாள் காமன்வெல்த் சாம்பியனான மனோஜ் குமார், லைட் வெல்டர்வெயிட் (64 கிலோ) பிரிவில் 36-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

அவர் தற்போது வெல்டர்வெயிட் 69 கிலோ பிரிவில் விளையாடுகிறார்.

இதனிடையே, பாந்தம்வெயிட் பிரிவில் அயர்லாந்து வீரர் மைக்கேல் கான்லான் முதலிடத்தில் உள்ளார்.

ஒலிம்பிக் போட்டியின்போது சர்ச்சைக்குரிய வகையில் தோல்வியடைந்த அவர், தற்போது தொழில்முறை குத்துச்சண்டைக்கு மாறியுள்ளார்.

tags
click me!