தங்கம் வென்றார் இந்திய வீரர்…

First Published Dec 24, 2016, 12:20 PM IST
Highlights


ஆசிய லூக் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் சிவ கேசவன் வெள்ளிக்கிழமை தங்கப் பதக்கம் வென்றார்.

ஜப்பானில் நடைபெற்ற இந்தப் போட்டியில், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை சிவ கேசவன் 130.4 கி.மீ. வேகத்தில் சருக்கிச் சென்று 1 நிமிடம் 39.962 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார்.

ஜப்பானின் டனாகா ஷோஹெய் 1 நிமிடம் 44.874 விநாடிகளில் 2-ஆவதாக வந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இவர், பந்தயத்தின்போது 126.6 கி.மீ. வேகத்தில் சருக்கிச் சென்றார்.

மூன்றாவதாக, சீன தைபே வீரர் லியென் டே என் 1 நிமிடம் 45.120 விநாடிகளில் இலக்கை அடைந்தார். வெண்கலப் பதக்கம் வென்ற அவர், 124.3 கி.மீ வேகத்தில் பயணித்தார்.

சிவ கேசவன் கடந்த 2011, 2012 ஆசிய கோப்பை போட்டியிலும் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஆஸ்திரியாவின் இன்ஸ்புருக் நகரில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சிவ கேசவன் பங்கேற்கிறார்.

அதைத் தொடர்ந்து, தென் கொரியாவில் 2018-ஆம் ஆண்டு நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறும் வகையில் உலகக் கோப்பை லூக் போட்டியிலும் பங்கேற்க உள்ளார்.

tags
click me!