ஒரேயொரு அதிரடி மாற்றத்துடன் களமிறங்கும் இந்தியா!! உத்தேச அணி

By karthikeyan VFirst Published Feb 9, 2019, 4:37 PM IST
Highlights

இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதை அடுத்து டி20 தொடர் 1-1 என சமநிலை அடைந்துள்ளது. நாளை நடைபெற உள்ள கடைசி போட்டியில் ஜெயித்தால்தான் தொடரை வெல்ல முடியும் என்பதால் இரு அணிகளுமே வெற்றி முனைப்பில் உள்ளன. 

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. அந்த போட்டியில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலுமே அந்த அணி சிறப்பாக ஆடி, 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணிக்கு டி20 கிரிக்கெட்டில் மோசமான தோல்வியை பரிசளித்தது. 

அந்த தோல்வியிலிருந்து மீண்டெழுந்த இந்திய அணி, இரண்டாவது போட்டியில் சிறப்பாக ஆடியது. முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணியை கடைசி ஓவர்களில் முழுவதுமாக கட்டுப்படுத்தி, 158 ரன்களில் சுருட்டியது. 159 ரன்கள் என்ற இலக்கை எளிதாக விரட்டி வெற்றி பெற்றது. 

இரண்டாவது டி20 போட்டியில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய அனைத்து துறைகளிலும் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது. முதல் போட்டியில் அதிக ரன்களை வாரி வழங்கிய இந்திய பவுலர்கள், இரண்டாவது போட்டியில் அபாரமாக பந்துவீசி ரன்ரேட்டை கட்டுக்குள் வைத்திருந்தனர். அதேபோல் பேட்டிங்கிலும் ரோஹித் சர்மா அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுக்க, ரிஷப் பண்ட் சிறப்பாக முடித்துவைத்தார். 

இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதை அடுத்து டி20 தொடர் 1-1 என சமநிலை அடைந்துள்ளது. நாளை நடைபெற உள்ள கடைசி போட்டியில் ஜெயித்தால்தான் தொடரை வெல்ல முடியும் என்பதால் இரு அணிகளுமே வெற்றி முனைப்பில் உள்ளன. 

கடைசி போட்டியில் இந்திய அணி ஒரேயொரு மாற்றத்துடன் களமிறங்க வாய்ப்புள்ளது. சாஹலுக்கு பதிலாக குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்படலாம். அதைத்தவிர வேறு மாற்றத்திற்கு வாய்ப்பில்லை. இரண்டாவது போட்டியிலேயே இந்த மாற்றம் எதிர்பார்க்கப்பட்டதுதான். ஆனால் அந்த மாற்றம் செய்யப்படவில்லை. கடைசி போட்டியில் குல்தீப் ஆட வாய்ப்புள்ளது. 

உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா(கேப்டன்), ஷிகர் தவான், ரிஷப் பண்ட், விஜய் சங்கர், தோனி(விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, குருணல் பாண்டியா, குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், கலீல் அகமது. 
 

click me!